ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திகள் Top 10 news @ 3 pm

author img

By

Published : Jul 3, 2021, 2:58 PM IST

3pm
3pm

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம்

1. கரோனா இறப்பை குறைத்துக் காட்டவில்லை - ராதாகிருஷ்ணன்

கரோனா தொற்றால் ஏற்படும் இறப்பை குறைத்து காட்டவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2. கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி: தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்திய சுகாதாரத் துறை அமைச்சர்!

தமிழ்நாட்டில் முதல்முறையாக கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாமினை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

3. உற்பத்தி பொருட்களை எப்படி சந்தைபடுத்தலாம் - விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அட்வைஸ்!

கன்னியாகுமரியில் அதிகளவில் அன்னாசி பழங்களை உற்பத்தி செய்து அதனை சந்தைப்படுத்துதல் குறித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

4. திமுகவை உரசும் சீமான்... திடீர் விமர்சனத்தின் காரணம் என்ன?

உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசைப் பாராட்டி வருவது கட்சிக்கு நல்லதல்ல, இதனால் கட்சி தனது வாக்குவங்கியை இழக்கக்கூடும் என்ற கருத்து சீமான் காதுக்கு சென்றுள்ளது.

5. குறையும் கரோனா பாதிப்பு - பள்ளிகளை திறக்க கோரிக்கை

கரோனா பெருந்தொற்று குறைந்து வருவதால் ஜூலை மூன்றாவது வாரத்தில் பள்ளிகளை திறக்கவேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

6. புதுக்கோட்டையில் பாதுகாப்பு பணி ஒப்பந்த ஆசிரியம் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் பாதுகாப்பு பணி ஒப்பந்தத்தை வெளிப்படுத்தும் ஆசிரியம் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

7. சக்கர நாற்காலி இல்லாமல் கூடைப்பந்து விளையாட்டு: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பிரக்யா சிங் தாக்கூர்!

பாஜக எம் பி பிரக்யா சிங் தாக்கூர் பல ஆண்டுகளாக சக்கர நாற்காலியின் உதவியுடனேயே வலம் வரும் நிலையில், உற்சாகமாக அவர் எழுந்து நின்று கூடைப்பந்து விளையாடும் காணொலி வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

8. மாநில அந்தஸ்தை தொடர்ச்சியாக வலியுறுத்துவோம்- நாராயணசாமி

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை பெறுவதில் பாஜகவுக்கு அக்கறையில்லை என்றும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மாநில அந்தஸ்தை வலியுறுத்தும் எனவும் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரவித்துள்ளார்.

9. சக்கர நாற்காலி இல்லாமல் கூடைப்பந்து விளையாட்டு: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பிரக்யா சிங் தாக்கூர்!

பாஜக எம் பி பிரக்யா சிங் தாக்கூர் பல ஆண்டுகளாக சக்கர நாற்காலியின் உதவியுடனேயே வலம் வரும் நிலையில், உற்சாகமாக அவர் எழுந்து நின்று கூடைப்பந்து விளையாடும் காணொலி வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

10. ஒளிப்பதிவு சட்ட மசோதா: இயக்குநர் அமீர் எதிர்ப்பு

ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள ஒளிப்பதிவு சட்ட மசோதாவிற்கு இயக்குநர் அமீர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.