ETV Bharat / state

அரசு கலை, அறிவியல் கல்லூரி முதுநிலை சேர்க்கைக்கு ஆக.14 முதல் விண்ணப்பம்!

author img

By

Published : Aug 11, 2023, 7:04 PM IST

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் PG சேர கட்டணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் PG சேர கட்டணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலைப் படிப்பில் சேருவதற்கு ஆகஸ்ட்14ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை விண்ணப்பலாம் என கல்லூரி கல்வி இயக்குனர் கீதா குறிப்பு வெளியிட்டுள்ளார்.

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலைப் படிப்புகளில் உள்ள 24 ஆயிரத்து 341 இடங்களில் சேருவதற்கு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குநர் கீதா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள முதுநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளின் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான (2023-2024) விண்ணப்பங்களை www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதள முகவரிகளில் பதிவு செய்யலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், கல்லூரிச் சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre - AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. மையங்கள் குறித்த விவரங்களையும் தெரிந்து கொள்ள www.tngasa.in மற்றும் www.tngasa.org முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க: 'லூனா-25' விண்கலத்தை வெற்றிகரமாக ஏவிய ரஷ்யா: சந்திரயான்-3க்கு முன்பே தரையிறங்குகிறதா?

விண்ணப்பங்களை ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி விண்ணப்பங்கள் பதிவு செய்யலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.58, பதிவுக் கட்டணமாக ரூ. 2ம் செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்டி பிரிவு மாணவர்கள், பதிவு கட்டணம் மட்டும் செலுத்தினால் போதுமானது. விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Debit Card/Credit Card/Net Banking/UPI மூலமும், இதர சில்லறை பணம் மூலமாகவும் செலுத்தலாம்.

இணையதள மூலமாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் கல்லூரிச் சேர்க்கை உதவி மையங்களில் “The Director, Directorate of Collegiate Education, Chennai – 15 என்ற பெயரில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை மூலமாகவும் அல்லது நேரடியாகவும் செலுத்தலாம். மேலும் மாணவர்கள் தங்களின் சந்தேகங்களை 93634 62070, 93634 62042, 93634 62007, 93634 62024 ஆகிய தொடர்பு எண்களிலும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்" என அதில் கூறி உள்ளார். இதுவரையில் தமிழ்நாட்டில் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலைப் பட்டப்படிப்பில் 24 ஆயிரத்து 341 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பெண்களுக்கு எதிரான உறுப்பு வன்முறை கொடுமையானது - மணிப்பூர் கமிட்டியின் அறிக்கையை தாக்கல் செய்ய 2 மாத கால அவகாசம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.