ETV Bharat / state

தீண்டாமைச்சுவர் விவகாரம்: டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

author img

By

Published : Dec 9, 2019, 5:15 PM IST

Press meet
Press meet

சென்னை: கோவையில் 17 பேரின் உயிரைப்பறித்த தீண்டாமைச் சுவரெழுப்பிய சிவசுப்பிரமணியன் மீதும் காவல் துணைக் கண்காணிப்பாளர் மணி மீதும் நடவடிக்கை எடுக்க பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கைவிடுத்துள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் இன்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில், மாநில ஒருங்கிணைப்பாளர் பொழிலன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தந்தைப் பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது அவர்கள், "பெரியாரிய கொள்கை கொண்ட 100-க்கும் மேலான அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் டிசம்பர் 22ஆம் தேதி கோவையில் நடக்கவிருந்த, ’ஜாதி ஒழிப்பு மாநாடு’ அண்மையில் அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பால் பிப்ரவரி மாதம் முதல் வாரத்திற்கு தள்ளிவைக்கப்படுகிறது.

மேட்டுப்பாளையம் நடூர் தீண்டாமைச்சுவர் இடிந்து விழுந்த நிகழ்வில், அதை எதிர்த்துப் போராடியோர் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைத் தாக்குதலை இந்தக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. 22 அடி உயர சுவரை சிவசுப்பிரமணியன் தீண்டாமைச் சுவராகவே அமைத்ததுடன், அங்கு மக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் கழிவுநீரை வெளியேற்றியுள்ளார். இதனை பலமுறை அரசு அலுவர்களிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காமல் விட்டதால்தான் இன்று பல உயிர்கள் பலியாகியுள்ளன.

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் செய்தியாளர் சந்திப்பு

எனவே ஆறு அடி உயரமிருந்த சுவரை 22 அடித் தீண்டாமைச்சுவராக மாற்றிய சிவசுப்பிரமணியனை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். இதைக்கண்டித்துப் போராடிய தமிழ்ப்புலிகள் அமைப்பின் தலைவர் நாகை. திருவள்ளுவனை அடித்து சித்ரவதை செய்த காவல் துணைக் கண்காணிப்பாளர் மணி, ஆய்வாளர் சென்னகேசவலு உள்ளிட்டோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், நாகை. திருவள்ளுவன் மீது தொடர்பே இல்லாத பல வழக்குகளை காவல் துறையினர் பதிவதை கண்டிப்பதுடன் அவரை உடனடியாகப் பிணையில் விடுவிக்க வேண்டும் எனவும் இக்கூட்டமைப்பு வலியுறுத்துகிறது “ எனக் கேட்டுக்கொண்டனர்.

இதையும் படிங்க: ‘மருத்துவ இட ஒதுக்கீடு முறையில் மாற்றம் இல்லை’ - அமைச்சர் உறுதி

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 09.12.19

தீண்டாமை சுவர் எழுப்பிய சிவசுப்பிரமணியன் மீதும், டி.எஸ்.பி மணி மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க பெரியரிய அமைப்புகள் கோரிக்கை...

பெரியார் உணர்வாலர்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் பொழிலன் ஆதித்தகிழர் கட்சி தலைவர் ஜக்கையன், மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் சேப்பாக்கத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது,
பெரியாரிய கொள்கைகொண்ட
100 க்கும் மேலான அமைப்புகள் ஒருங்கிணைப்பில் டிசம்பர் 22 ம் தேதி கோவையில் நடக்க இருந்த ஜாதி ஒழிப்பு மாநாடாது, சமீபத்தில் அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பால் மாநாடு நடப்பது கைவிடப்பட்டுள்ளது. இந்த மாநாடு மீண்டும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. மேட்டுப்பாளையம் நடூர் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் நிகழ்த்தப்பட்ட வன்முறையை இந்த கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறோம்.. 22 அடி உயர சுவரை சிவசுப்பிரமணியன் தீண்டாமை சுவராகவே அமைத்ததுடன் அங்கிருந்து மக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் கழிவுநீரை வெளியேற்றினார். இதனை பல முறை கண்டித்தும், அரசு அதிகாரிகளிடன் மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் விட்டதால் அந்த சுவர் இடிந்து பல உயிர்கள் பலியாகின. 6 அடி உயரமிருந்த சுவரை 22 அடியாக மாற்றியவர் சிவசுப்பிரமணியன் எனவே, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தமிழ்புலிகள் தலைவர் நாகை.திருவள்ளுவன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை முன்வைத்து போராடியதற்காக அவரை இழிவு படுத்தி இழுத்துச்சென்று அடித்து சித்ரவதை செய்த டி.எஸ்.பி மணி மற்றும் ஆய்வாளர் சென்னகேசவலு உள்ளிட்டோர் வன்கொடுமை தடுப்புப் பிரிவில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும், நாகை திருவள்ளூவன் மீது சம்மந்தமே இல்லாத பல வழக்குகளை பதிந்து காவல்துறையினர் நடந்துகொள்வதையும் கண்டிப்பதுடன் அவரை பிணையில் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்..
தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் உண்மை நிலையை எடுத்துக்கூறக்கூட விடாமல் தடுக்கப்பட்ட நிகழ்வுக்கும் கடும் கண்டத்தை தெரிவித்துக்கொள்கிறோம் என்றனர்..

tn_che_03_periyarists_organizations_demanding_criminal_action_against_dsp_mani_of_mettupalaiyam_script_7204894

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.