ETV Bharat / state

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அதிரடி பணியிட மாற்றம்

author img

By

Published : Sep 20, 2022, 9:02 PM IST

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அதிரடி பணியிட மாற்றம்
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அதிரடி பணியிட மாற்றம்

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை: பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காக்கர் லா உஷா வெளியிட்டுள்ள பணியிட மாற்ற உத்தரவில், முதன்மை கல்வி அலுவலர்களின் பணிபுரியும் அலுவலர்களுக்கு நிர்வாகம் மாறுதல் வழங்கப்படுகிறது. மேலும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வும் வழங்கப்படுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த விஜயலட்சுமி அரியலூர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலராகவும், திருநெல்வேலி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி நாகப்பட்டினம் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றி வந்தவர்கள் முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். சென்னை கிழக்கு மாவட்ட கல்வி அலுவலர் சரஸ்வதி கள்ளக்குறிச்சி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலராக நியமனம் செய்யப்படுகிறார்.

விருதுநகர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி, திருநெல்வேலி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலராக பணியிடம் மாற்றம் செய்யப்படுகிறார். புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் மஞ்சுளா தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் முத்தையா தஞ்சாவூர் மகாராஜா சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகத்தின் நிர்வாக அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்படுகிறார். தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன் தொடக்கக் கல்வித் துணை இயக்குனராக நியமனம் செய்யப்படுகிறார்.

வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் சம்பத் தனியார் பள்ளிகள் துணை இயக்குனராக நியமிக்கப்படுகிறார். திருத்தணி மாவட்ட கல்வி அலுவலர் அருளரசு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் துணை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: எஸ்.பி.வேலுமணி வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.