ETV Bharat / state

இந்தியாவில் கரோனா புதிய பாதிப்பு 600ஐ தாண்டியது...மீண்டும் அமலாகிறதா கட்டுப்பாடுகள்?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 1, 2024, 6:30 PM IST

corona
கரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிய கரோனா வைரஸால் 196 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது

சென்னை: சீனாவின் உகான் மாநகரில் கண்டறியப்பட்ட கரோனா என்னும் கொடிய வைரஸ் 2 ஆண்டுகள் உலக நாடுகளை ஆட்டிப்படைத்தது. தனி மனித இடைவெளி, முக கவசம், லாக் டவுன் என எதற்கும் கட்டுப்படாத கரோனா கடைசியாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகே ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டாக கரோனா பரவல் இல்லாத நிலையில் தற்போது மீண்டும் ஆட்டம் காணத்தொடங்கியுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் படி கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 636 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகப் பதிவாகியுள்ளது. இதிலும் குறிப்பாக கோவிட்-19 துணை மாறுபாடு JN.1 வைரஸ்ஸிற்கு இந்தியா முழுவதும் 196 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்தாண்டும் கடைசி நாளான நேற்று நாடு முழுவதும் 841 பேர் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மத்திய சுகாதரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 227 நாட்களுக்குப் பின் பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்தியா முழுவதும் தற்போது 4309 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதனையடுத்து பொது இடங்களுக்குச் செல்லும் போது முகக் கவசம் அணியவும், பாதுகாப்பாக இருக்கவும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கரோனா: தமிழ்நாட்டில் ஒற்றை இலக்கத்திலிருந்த பாதிப்பு தற்போது இரட்டை இலக்கமாகப் பதிவாகி வருகிறது. இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் இன்று 831 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 28 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 16 பேர், செங்கல்பட்டில் 3 பேர், கோவை மற்றும் மதுரையில் தலா 2 பேர், நீலகிரி, திருவள்ளூர், கன்னியாகுமரி, திருவண்ணாமலை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இன்று கரோனா பாதிப்பில் இருந்து 29 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 175 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே சென்னையில் சிகிச்சை பெற்று வந்த 44 வயது பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திண்டுக்கல்லில் இளைஞரை பெட்ரோல் ஊற்றி எரிந்து கொலை செய்த வழக்கில் இருவர் கைது.. பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.