ETV Bharat / state

தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா..!

author img

By

Published : Apr 29, 2022, 10:48 PM IST

corona count  tamil nadu corona count  corona count increasing in Tamil nadu  covid 19  corona update  tamil nadu corona update  கரோனா பாதிப்பு  தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு  கரோனா நிலவரம்  கரோனா மொத்த எண்ணிக்கை  கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை
அதிகரிக்கும் கரோனா

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 54 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.

சென்னை: பொது சுகாதாரத் துறை இயக்குனரகம் ஏப்ரல் 29ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 20 ஆயிரத்து 57 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம் தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 54 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 49 லட்சத்து 72 ஆயிரத்து 799 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 34 லட்சத்து 53 ஆயிரத்து 883 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டன.

அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 507 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 35 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 15 ஆயிரத்து 351 என உயர்ந்துள்ளது.

மேலும் சென்னையில் புதிதாக 35 நபர்களுக்கும்; செங்கல்பட்டில் 10 நபர்களுக்கும்; கோயம்புத்தூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா இரண்டு நபர்களுக்கும்; கன்னியாகுமரி, நீலகிரி, திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு நபர்களுக்கும் என 54 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளன.

நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் சென்னையில் 337 பேரும், செங்கல்பட்டில் 56 பேரும், காஞ்சிபுரத்தில் 13 நபர்களும், கோயம்புத்தூரில் 12 நபர்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 15 நபர்களும் என மொத்தம் 506 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க: ஐஐடியில் அதிகரிக்கும் கரோனா - மேலும் 11 பேருக்கு தொற்று உறுதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.