ETV Bharat / state

சென்னை விமான நிலையத்தில் மீண்டும் தொடங்கிய கரோனா பரிசோதனை

author img

By

Published : Dec 24, 2022, 11:52 AM IST

சென்னை விமான நிலையத்தில் மீண்டும் தொடங்கிய கரோனா பரிசோதனை...!
சென்னை விமான நிலையத்தில் மீண்டும் தொடங்கிய கரோனா பரிசோதனை...!

சென்னை விமான நிலையத்தில் சர்வதேச விமான பயணிகளுக்கு நள்ளிரவில் இருந்து மீண்டும் கரோனா வைரஸ் பரிசோதனை தொடங்கியது.

சென்னை: உலகின் பல்வேறு நாடுகளில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுத்துவருகின்றன. அந்த வகையில் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கரோனா வைரஸ் பரிசோதனை செய்யும் நடவடிக்கை நள்ளிரவு முதல் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் மீண்டும் தொடங்கிய கரோனா பரிசோதனை...!
சென்னை விமான நிலையத்தில் மீண்டும் தொடங்கிய கரோனா பரிசோதனை

சென்னை விமான நிலையத்திலும் சர்வதேச முன்னையத்தில் வருகைப் பகுதியில் வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கரோனா வைரஸ் பரிசோதனையை மாநில சுகாதாரத்துறை தொடங்கியுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் மீண்டும் தொடங்கிய கரோனா பரிசோதனை...!
சென்னை விமான நிலையத்தில் மீண்டும் தொடங்கிய கரோனா பரிசோதனை...!

அதற்காக சென்னை சர்வதேச விமான நிலையம் பயணிகள் வருகை பகுதியில் செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை சிறப்பு முகாம்களை அமைத்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக அமெரிக்கா, சீனா, ஹாங் காங், ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளை தேர்வு செய்து பரிசோதனை நடக்கிறது.

சென்னை விமான நிலையத்தில் மீண்டும் தொடங்கிய கரோனா பரிசோதனை...!

இந்த நாடுகளில் இருந்து நேரடி விமானங்கள் இல்லாமல் இணைப்பு விமானங்களில் பயணிகள் மாறி வருவதால் வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து விமான பயணிகளும் கண்காணிக்கப்படுகின்றனர். அவர்களில் தேர்வு செய்யப்பட்ட இரண்டு சதவீதம் பயணிகளுக்கு சென்னை விமான நிலையத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடக்கிறது. அந்த இரண்டு சதவீதம் பயணிகள் யார்? என்பதை அந்தந்த விமான நிறுவனங்களே முடிவு செய்து அறிவிக்கின்றனர்.

விமானங்களில் வரும்போது சோர்வாக, இருமல் சளி மற்றும் காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் போன்றவைகளுடன் இருக்கும் பயணிகளை இவ்வாறு இரண்டு சதவீத பரிசோதனைக்கு உட்பட்ட பயணிகளாக தேர்வு செய்கின்றனர். குறிப்பாக வெளிநாட்டவர்களுக்கு இந்த பரிசோதனைகள் அதிகமாக நடக்கின்றன.

இவர்கள் தவிர மற்ற பயணிகள் விருப்பப்பட்டால் அவர்களாகவே முன்வந்து பரிசோதனை செய்து கொள்ளலாம். 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகளான பயணிகளுக்கு கரோனா வைரஸ் பரிசோதனை கிடையாது. ஆனால் அவர்களில் யாராவது இருமல், சளித்தொல்லை போன்றவைகள் அதிகமாக இருந்தால் அவர்களுக்கும் பரிசோதனை நடக்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு பரிசோதனைக்கு உட்படும் பயணிகள் சிறிது நேரம் காத்திருந்து தங்களுடைய பரிசோதனை முடிவுகளை வாங்கிவிட்டு செல்லலாம். அந்தப் பரிசோதனை முடிவில் அவர்களுக்கு பாதிப்பு இருப்பது தெரிய வந்தால் உடனடியாக அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதோடு அந்தப் பயணிகள் மருத்துவமனைகள் அல்லது அவர்களின் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை மேற்கொள்ளப் படலாம் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.