ETV Bharat / state

போக்குவரத்துப் புலனாய்வு காவல் துறையினருக்கு எதிராக புகார் மனு

author img

By

Published : Oct 22, 2019, 10:25 PM IST

ஜெயபிரகாஷ் பேட்டி

சென்னை: விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஆதரவாக செயல்பட்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர் காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் சேலை கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் கடந்த 14ஆம் தேதியன்று தனது இருசக்கர வாகனத்தில், சென்னை ராஜமங்கலம் சமிக்ஞை (சிக்னல்) சந்திப்பான 200 அடி சாலை வழியாக அலுவலக பணிக்காக சென்றுகொண்டிருந்தார். அப்போது வலப்புறமாக வந்த இருசக்கர வாகனம் பாலாஜி சென்ற வாகனத்தின் மீது மோதியது. இதில் அவருக்கு வலது காலில் படுகாயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

இந்நிலையில் தனது சகோதரர் பாலாஜி மீது இருசக்கர வாகனத்தை மோதி விபத்து ஏற்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது இளைய சகோதரர் ஜெயபிரகாஷ் திருமங்கல் போக்குவரத்துப் புலனாய்வு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் காவலர்கள் அவரது புகாரை வாங்காமல் விபத்தை ஏற்படுத்தியவருக்குச் சாதகமாக நடந்துள்ளனர்.

இதில் அதிருப்தியடைந்த ஜெயபிரகாஷ், புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

ஜெயபிரகாஷ் பேட்டி

இதையும் படிங்க:பொய் வழக்கு போட்ட போலீஸ் மீது நடவடிக்கை எடுப்பேன் - வசந்தகுமார்

Intro:Body:போக்குவரத்து உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் மீது ஆணையர் அலுவலகத்தில் புகார்*

விபத்தை ஏற்படுத்திய நபர் மீது புகார் அளிக்கச் சென்ற இடத்தில் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்டு புகார் அளித்தவர்கள் மீதே காவல்துறையினர் வழக்குபதிவு செய்ததாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் சேலை கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி.இவர் கடந்த 14 ஆம் தேதியன்று தனது இருசக்கர வாகனத்தின் மூலம், சென்னை ராஜமங்கலம் சிக்னல் சந்திப்பான 200 அடி சாலை வழியாக அலுவலக பணிக்காக சென்று கொண்டிருந்தபோது அவரது வலதுபுறமாக பாடியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பாலாஜியில் வலது காலில் படுகாயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் தனது அண்ணன் பாலாஜி மீது மோதி விபத்து ஏற்படுத்தியவர் மீது புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக அவரது தம்பி ஜெயபிரகாஷ் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தனது அண்ணன் கடந்த 14 ஆம் தேதி அலுவலக பணிக்காக இருசக்கர வாகனத்தில் சென்றதாகவும், ராஜ மங்கலம் சிக்னல் அருகே நின்றுகொண்டிருந்தபோது விதியை மதிக்காமல் அவரது வலதுபுறமாக இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த பாடியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் மோதி விபத்து ஏற்படுத்தியதாகவும் கூறினார்.

மேலும் இந்த விபத்தில் தனது அண்ணன் பாலாஜியின் வலது கால் படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறிய அவர், இது தொடர்பாக கடந்த 16 ஆம் தேதி திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் தெரிவித்தார். ஆனால் அங்கிருந்த உதவி ஆய்வாளர் கலைமணி மற்றும் தலைமை காவலர் முத்துராஜ் ஆகியோர் தனது புகாரை ஏற்காமல், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு படுகாயம் அடைந்த பாலாஜி மீதே வழக்கு பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் விபத்தை ஏற்படுத்திய நபர் காவல் துறை உயர் அதிகாரியின் உறவினர் என்றும் இதன் காரணமாகவே தங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என குற்றம்சாட்டினார்

இந்த விபத்தால் தனது அண்ணன் பாலாஜி அவரது மனைவி மற்றும் குழந்தைகள் மிகுந்த பாதிப்படைந்துள்ளதாக கூறிய அவர், இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் குற்றமிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகவும் கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.