ETV Bharat / state

முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளில் கமல் ஹாசன் தொடங்கி வைக்கும் புகைப்படக் கண்காட்சி

author img

By

Published : Feb 26, 2023, 6:32 PM IST

CM
CM

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 28ஆம் தேதி பாரிமுனையில் நடைபெறவுள்ள புகைப்படக் கண்காட்சியை மநீம தலைவர் கமல் ஹாசன் திறந்து வைக்கவுள்ளார். இதற்காக திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 1ஆம் தேதி, தனது 70ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பாரிமுனை ராஜாஅண்ணாமலை மன்றத்தில் வரும் 28ஆம் தேதி முதல் மார்ச் 12ஆம் தேதி வரை புகைப்படக் கண்காட்சி நடைபெறவுள்ளது.

இந்த கண்காட்சியை திறந்து வைக்க திறந்து வைக்க வரும்படி, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா இருவரும் நேரில் சென்று கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்தனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மநீம கட்சியின் அலுவலகத்தில் கமல்ஹாசனை சந்தித்து அழைப்பிதழை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, "முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 28ஆம் தேதி பாரிமுனை ராஜாஅண்ணாமலை மன்றத்தில் நடைபெறும் புகைப்படக் கண்காட்சியை திறந்து வைக்க வருமாறு கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்தோம். புகைப்படக் கண்காட்சியை திறந்து வைக்க கமல்ஹாசன் வருகை தருவது திமுகவினருக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னை தியாகராய நகரில் விரைவில் வருகிறது ஆகாய நடை மேம்பாலம்… இனி கூட்ட நெரிசல் இன்றி செல்லலாம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.