ETV Bharat / state

இந்து சமய அறநிலையத்துறையின் ரூ.80.56 கோடி மதிப்பீட்டிலான திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல்!

author img

By

Published : Aug 15, 2023, 9:43 AM IST

Updated : Aug 15, 2023, 12:22 PM IST

தமிழ்நாட்டில் கட்டப்படவுள்ள புதிய திட்டப்பணிகள்
தமிழ்நாட்டில் கட்டப்படவுள்ள புதிய திட்டப்பணிகள்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.80.56 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஆகஸ்ட் 14) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 80 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருக்கோயில்களில் கட்டப்படவுள்ள திருமண மண்டபம், திருக்குளப் பணிகள், பக்தர்கள் தங்கும் விடுதி, வணிக வளாகம், தடுப்புச் சுவர்கள், முடிகாணிக்கை மண்டபம், பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம், உணவருந்தும் கூடம், அடுக்குமாடி குடியிருப்புகள், கல்லூரி ஆய்வகங்கள் போன்ற புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்து சமய அறநிலையத்துறை அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க திட்ட செயலாக்கம், 866க்கும் மேற்பட்ட திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு, திருத்தேர்களை பழுதுபார்த்து வீதி உலா, திருக்குளங்களை புனரமைத்தல், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் மீட்பு, அன்னதானத் திட்டம் விரிவாக்கம், மலைத் திருக்கோயில்கள் மற்றும் முக்கிய திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள், புதிய கல்வி நிறுவனங்கள் தொடக்கம், ஒருகால பூஜை திட்டம் விரிவாக்கம், துறையின் செயல்பாடுகளை கணினிமயமாக்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருவதோடு, சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகளும் தொடர்ந்து நிறைவேற்றபட்டு வருகின்றன.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இதுவரை 6,962 திருக்கோயில்களில் ரூ. 3,373 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில், கோயம்புத்தூர் மாவட்டம் - தேக்கம்பட்டி, அருள்மிகு வனபத்ர காளியம்மன் திருக்கோயிலில், ரூ. 14.50 கோடி மதிப்பீட்டில் சுற்று பிரகார மண்டபம், நடைபாதை மண்டபம், சுற்றுச்சுவர் மற்றும் முடிகாணிக்கை மண்டபம் அமைக்கும் பணிகளும், மதுரை மாவட்டம் - திருப்பரங்குன்றம், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ. 11 கோடி மதிப்பீட்டில் தெப்பக் குளத்தையொட்டி தடுப்புச் சுவர் அமைத்தல் மற்றும் கந்த சஷ்டி மண்டபம் கட்டும் பணிகள்;

திருவள்ளூர் மாவட்டம் - திருவேற்காடு, அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் ரூ. 4.80 கோடி மதிப்பீட்டில் பக்தர்கள் காத்திருக்கும் கூடம், உணவருந்தும் கூடம் கட்டும் பணிகள், சேலம் மாவட்டம் - மேச்சேரி, அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயிலில் ரூ. 4.95 கோடி மதிப்பீட்டில் பக்தர்கள் தங்கும் விடுதி, உணவருந்தும் கூடம் மற்றும் செயல் அலுவலர்கள் குடியிருப்பு கட்டும் பணிகள், சென்னை - பள்ளிக்கரணை, அருள்மிகு வீரத்தம்மன் திருக்கோயிலில் ரூ. 4 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டும் பணி;

புதுக்கோட்டை மாவட்டம் - நார்த்தாமலை, அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயிலில் ரூ. 3.75 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி, தஞ்சாவூர் மாவட்டம் - தாமரங்கோட்டை, அருள்மிகு கண்டேஸ்வரர் திருக்கோயிலில் ரூ. 3.75 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி, திருவள்ளூர் மாவட்டம் - சிறுவாபுரி, அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ. 3.14 கோடி மதிப்பீட்டில் திருக்குளத் திருப்பணி, கள்ளக்குறிச்சி மாவட்டம் - திருக்கோவிலூர், அருள்மிகு திருவிக்ரம சுவாமி திருக்கோயிலில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் தெப்பக்குளம் மற்றும் தீர்த்தக்குளங்களை சீரமைத்து நீராழி மண்டபம் கட்டும் பணி;

கடலூர் மாவட்டம் - சிதம்பரம், அருள்மிகு தில்லையம்மன் திருக்கோயிலில் ரூ. 2.75 கோடி மதிப்பீட்டில் திருக்குளம் மேம்படுத்தும் பணி; சென்னை - சைதாப்பேட்டை, அருள்மிகு காரணீஸ்வரர் திருக்கோயிலில் ரூ. 2.27 கோடி மதிப்பீட்டில் பணியாளர் குடியிருப்பு கட்டும் பணி, விழுப்புரம் மாவட்டம் - மேல்மலையனூர், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் ரூ. 1.96 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டும் பணி, திருவாரூர் மாவட்டம் - வலங்கைமான், அருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோயிலில் ரூ. 1.93 கோடி மதிப்பீட்டில் முடிக்காணிக்கை மண்டபம் மற்றும் பக்தர்கள் இளைபாறும் மண்டபம் கட்டும் பணி;

திருச்சிராப்பள்ளி மாவட்டம் - குமாரவயலூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 1.79 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முன் மண்டபத்தை சீரமைக்கும் பணி, சென்னை - திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில் சார்பில் ரூ. 8.37 கோடி மதிப்பீட்டில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணிகள், மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் ரூ. 1.25 கோடி மதிப்பீட்டில் அன்னதானக் கூடம் கட்டும் பணி,

நாகப்பட்டினம் மாவட்டம் - சிக்கல், அருள்மிகு நவநீதேஸ்வர சுவாமி திருக்கோயிலில் ரூ. 1.07 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டும் பணி, கிருஷ்ணகிரி மாவட்டம் - ஓசூர், அருள்மிகு காளிகாம்பாள் காமாட்டீஸ்வரர் திருக்கோயிலில் ரூ. 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மலர் வணிக வளாகம் கட்டும் பணி, திண்டுக்கல் மாவட்டம் - பழனி, அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் ரூ. 5.52 கோடி மதிப்பீட்டில் ஆய்வகங்கள் கட்டும் பணி என மொத்தம் 80 கோடியே 56 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள, புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகளுக்கு தமிழக முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் ஜெ.குமரகுருபரன், ஆணையர் க.வீ.முரளீதரன், கூடுதல் ஆணையர் அ.சங்கர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: Independence day 2023: சுதந்திர தினத்திற்காக ரயில் நிலையங்களில் தீவிர பாதுகாப்பு!

Last Updated :Aug 15, 2023, 12:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.