ETV Bharat / state

Independence day 2023: சுதந்திர தினத்திற்காக ரயில் நிலையங்களில் தீவிர பாதுகாப்பு!

author img

By

Published : Aug 15, 2023, 6:30 AM IST

heavy security at railway stations
சுதந்திர தினத்தை முன்னிட்டு ரயில் நிலையங்களில் தீவிர பாதுகாப்பு

சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில், சுதந்திர தினத்தையொட்டி 23 இருப்புப்பாதை காவல் நிலையங்களிலும் கடந்த மூன்று நாட்களாக சிறப்பு சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை: இந்தியா முழுவதும் 77-வது சுதந்திர தின விழா இன்று (ஆகஸ்ட்15) கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில், தற்போது உச்சக்கட்ட பாதுகாப்பு 7 அடுக்கு பாதுகாப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 77 வது சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15 இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில் விழாவினை சீா் குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக ஒன்றிய உள்துறைக்கு தகவல் கிடைத்துள்ளதைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள விமானநிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் போன்ற பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்துள்ளது.

இதையடுத்து சென்னை விமானநிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமுல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சென்னை மட்டும் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் தீவிர பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நாளை சென்னை இருப்புப்பாதை காவல் துறை சார்பில் வெளியிட்ட செய்தி குறிப்பில், "சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை இருப்புப்பாதை காவல் மண்டலத்தில் உள்ள 23 இருப்புப்பாதை காவல் நிலையங்களில் உள்ள காவல்துறையினர் அனைவரும் ஒரு அணியாக செயலப்பட்டு வருகிறார்கள்.

3 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 13 ஆய்வாளர்கள், 76 உதவி ஆய்வாளர்கள், 814 காவலர்கள் மற்றும் இரண்டு தமிழ்நாடு சிறப்புக்காவல் படையின் பட்டாலியனில் 140 காவலர்களை கொண்டு சென்னை இருப்புப்பாதை காவல் மண்டலத்தில், உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாள சோதனைக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் பொருட்டு மூழு நேர கண்காணிப்பில், தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஏற்பாடு அனைத்து சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் ஏற்பாடு செய்யப்ட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய இரயில் நிலையங்களான சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர், கோயமுத்துார் மற்றும் சேலம் ஆகிய இரயில் நிலையங்கள் மற்றும் ரயில் வழித்தடங்களில் மோப்ப நாய்கள், வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் உபகரணங்களை பயன்படுத்தி பயணிகளும், பயணிகளின் உடைமைகளும் தீவிர சோதனை செய்த பிறகு தான் ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.

மேலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு குற்ற தடுப்பு நடவடிக்கையாக 23 இருப்புப்பாதை காவல் நிலையங்களிலும் கடந்த 3 நாட்களாக சிறப்பு சோதனை மூலம் பழைய குற்றவாளிகள் - 93 நபர்களும், உரிமைகோராதா வாகனங்களும் சோதனை செய்யப்பட்டு அப்புறப்படுத்தபட்டுள்ளது. மேலும் தனிப்பிரிவு காவலர்கள் மற்றும் சாதாரண உடையிலும் காவலர்கள் நியமிக்கப்பட்டு எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்க தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது" என தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.

இதையும் படிங்க: 77 வது சுதந்திர தினம்: இணையத்தில் வைரலாகும் கட்டிடக் கலைஞர்களின் தேசிய கீதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.