ETV Bharat / state

சென்னை - மும்பை விரைவு ரயிலில் தீ விபத்து!

author img

By

Published : Jun 22, 2023, 8:13 PM IST

Updated : Jun 22, 2023, 9:47 PM IST

Etv Bharat
Etv Bharat

சென்னை சென்ட்ரலில் இருந்து மும்பை லோகமான்ய திலக் ரயில் நிலையம் வரை செல்லும் லோகமான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயில் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே சென்றபோது மின் இணைப்பு கேபிளில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மும்பை லோகமான்ய திலக் ரயில் நிலையம் வரை செல்லும் லோகமான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயில் (MAS LTT EXPRESS) வண்டி எண் - 12163 பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே சென்ற போது இன்ஜின் பகுதியில் தீப்பற்றி எரிந்து கரும்புகை வெளிவந்துள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மும்பைக்கு இன்று (ஜூன் 22) மாலை சரியாக 6:20 மணி அளவில் லோக்மான்ய திலக் அதிவிரைவு ரயில் புறப்பட்டது. இந்த நிலையில், புறப்பட்டு 20 நிமிடங்களுக்குள் பேஸின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தைக் கடந்த நிலையில், இந்த லோக்மான்ய திலக் அதிவிரைவு ரயில் வியாசர்பாடி ராமலிங்கம் கோயில் அருகே வந்தபோது திடீரென இன்ஜின் பகுதியில் கரும்புகை வெளிவந்தது.

ரயில் இன்ஜின் மற்றும் இணைக்கப்பட்ட முதல் பெட்டிக்கு இடையே திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனைக் கண்ட ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். ரயில் இன்ஜின் மற்றும் அதற்கு பின்னர் உள்ள பெட்டிகளில் கரும்புகை பரவியதால் பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இந்த சம்பவம் குறித்துத் தகவலறிந்து அங்கு விரைந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத்துறையினர் ரயில் இன்ஜின் மற்றும் பெட்டி இடையே ஏற்பட்ட தீயை 1 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

  • சென்னை சென்ட்ரலில் இருந்து மும்பை லோகமான்ய திலக் ரயில் நிலையம் வரை செல்லும் லோகமான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயில் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே சென்றபோது மின் இணைப்பு கேபிளில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.#Chennai #Trainaccident pic.twitter.com/cJSPlwUxfd

    — ETVBharat Tamilnadu (@ETVBharatTN) June 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த விபத்து குறித்து பெரம்பூர் இருப்புப் பாதை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் ரயில் பெட்டியின் இணைப்பு பகுதியில் இரண்டு பெட்டிகளுக்கு இடையே உள்ள பவர் கேபிளில் மின்கசிவு ஏற்பட்டதே தீ விபத்திற்குக் காரணம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், இந்த விபத்தில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை எனவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே ரயிலில் மாற்று இன்ஜின் பொருத்தப்பட்டு ரயில் மீண்டும் இயக்கப்பட்டு வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில் ஓட்டுநர் தீ விபத்து ஏற்பட்டதை அறிந்து சாமர்த்தியமாக ரயிலை உடனடியாக நிறுத்தியதே பெரும் விபத்து தவிர்க்கக் காரணமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது.

விபத்துக்கு காரணமான கப்ளிங்
விபத்துக்கு காரணமான கப்ளிங்

கடந்த 2-ஆம் ஒடிசா ரயில் விபத்தில் 292 பேர் உயிரிழந்த சம்பவம் அரங்கேறிய நிலையில் தற்போது ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அந்த ரயிலில் பயணம் செய்த பயணகளுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: ரயில்வே கேட் கீப்பர் அறைக்கு தீ வைக்க முயற்சி: சதி வேலையா? போலீசார் விசாரணை..

Last Updated :Jun 22, 2023, 9:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.