ETV Bharat / state

சென்னை மின்சார ரயில்கள் நாளை ரத்து.. எந்தெந்த பகுதிகளுக்கு தெரியுமா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 11, 2023, 5:32 PM IST

Chennai Railway Division announced Chennai to Andhra Pradesh electric trains cancellation
நாளை மின்சார ரயில்கள் ரத்து

Chennai local Trains: சென்னையில் இருந்து, ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டைக்கு செல்லும் மின்சார ரயில்கள் நாளை (அக்.12) ரத்து செய்படுவதாக, சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

சென்னை: சென்னையில் இருந்து, ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டைக்கு செல்லும் மின்சார ரயில்கள் நாளை (அக்.12) ரத்து செய்படுவது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “சென்னை சென்ட்ரல் - கூடுர் வழித்தடத்தில் தண்டவாள பராமரிப்பு பணி மேற்கொள்ளவுள்ளதால் சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரயில்கள் நாளை (அக்.12) ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேப்போல் சென்னை சென்ட்ரலிலிருந்து சூலூர்பேட்டைக்கு காலை 5.20, காலை 7.45 மணிக்கு புறப்படும் மெமு ரயிலும், மறுமார்க்கமாக சூலூர்பேட்டையிலிருந்து பகல் 12.35, மாலை 6.40 மணிக்கு புறப்படும் மெமு ரயிலும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ஆவடியிலிருந்து சென்ட்ரலுக்கு காலை 4.25, காலை 6.40 மணிக்கு புறப்படும் மெமு ரயிலும், மறுமார்க்கமாக சென்ட்ரலிலிருந்து இரவு 9.15 மணிக்கு புறப்படும் மெமு ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சூலூர்பேட்டை-நெல்லூர்: இதுபோல் சூலூர்பேட்டையிலிருந்து நெல்லூருக்கு காலை 7.55, காலை 10 மணிக்கு புறப்படும் மெமு ரயிலும், மறுமார்க்கமாக நெல்லூரிலிருந்து காலை 10.20, மாலை 4.15 மணிக்கு புறப்படும் மெமு ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தற்காலிக ரத்து: சென்னை சென்ட்ரலிருந்து சூலூர்பேட்டைக்கு காலை 8.35, காலை 10.15, பிற்பகல் 2.30, மாலை 3.30 மணிக்கும், சென்னை கடற்கரையிலிருந்து பகல் 12.40 மணிக்கும் புறப்படும் மின்சார ரயில் எளாவூர் வரை மட்டும் இயக்கப்படும். இதேப்போல், மறுமார்க்கமாக சூலூர்ப்பேட்டையில் இருந்து, சென்னை-க்கு அதாவது சென்னை சென்டரலுக்கு, பிற்பகல் 1.20, பிற்பகல் 3.15, மாலை 6.15 மணிக்கு புறப்படும் ரயில் எளாவூரிலிருந்து புறப்படும்.

இதுபோல், சூலூர்பேட்டையிலிருந்து சென்ட்ரலுக்கு காலை 11.45 மணிக்கும், கடற்கரைக்கு மாலை 5.20 மணிக்கும் புறப்படுவதற்கு பதிலாக கும்மிடிப்பூண்டியிலிருந்து இயக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காவிரி விவகாரம்; டெல்டா மாவட்டங்களில் கடைகளை அடைத்தும், அலுவலகங்களை முற்றுகையிட்டும் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.