ETV Bharat / state

ஜெயமாலா யானையை மறுவாழ்வு முகாமுக்கு அனுப்புங்கள் - பீட்டா கோரிக்கை

author img

By

Published : Nov 15, 2022, 10:53 PM IST

Etv Bharat
Etv Bharat

ஜெயமாலா யானையை மறுவாழ்வு முகாமுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று பீட்டா அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.

சென்னை: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்த ஜெயமாலா என்ற யானை கடந்த சில மாதங்களுக்கு முன்பு யானை பாகன்காளால் துன்புறுத்தப்படும் வீடியோ ஒன்று வெளிவந்த நிலையில், பீட்டா (PETA ) விலங்குகள் அமைப்பு அந்த யானையை மறுவாழ்வு முகாமுக்கு கொண்டு செல்ல வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

இது குறித்து பீட்டா அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் இன்று (நவ.15) சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், ஜெயமாலா யானை இன்னமும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கிறாள். மேலும், கடுமையான துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுவது குறித்த புதிய காணொலி ஆதாரம் கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டின் ஸ்ரீவில்லிப்புத்தூர் நாச்சியார் திருக்கோயிலின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள யானை நடத்தப்படும் விதம் தொடர்பாக, கடந்த அக்டோபரின் பிற்பகுதி மற்றும் சில தினங்களுக்கு முன்னர் பீட்டா இந்தியா விசாரணை மேற்கொண்டது. அப்போது சேகரிக்கப்பட்ட காணொலி ஆதாரத்தின் மூலம் யானை மீண்டும் சங்கிலியால் பிணைத்து கடினமான கான்கிரீட் தரையில் வைக்கப்பட்டு உள்ளதும், தன்னைப் போன்ற பிற யானைகளுடன் இல்லாமல் தனிமையில் இருப்பதும் தெரியவந்துள்ளது'' எனத் தெரிவித்தனர்.

மறுவாழ்வு மையம் அனுப்ப கோரிக்கை: மேலும் "உடனடியாக ஜெயமாலா யானையினை மீட்டு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்ப வேண்டும். அங்கு இவள் பாதுகாப்பாக உணர்வதோடு தங்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகளிலிருந்து மீள முடியும். மேலும், பிற யானைகளுடன் இணைந்து நிம்மதியாக வாழலாம்" என்றார், பீட்டா இந்தியாவின் அட்வோகசி புராஜெக்ட்ஸ் துணை இயக்குநர் ஹர்ஷில் மஹேஸ்வரி.

மேலும் அவர் பேசுகையில், '2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் ஊடகங்களால் வெளியிடப்பட்ட இரண்டு வெவ்வேறு காணொலிப் பதிவுகளில் ஜெயமாலாவை வெவ்வேறு பாகன்கள் பலமாக அடித்து துன்புறுத்தும் காட்சிகள் காணப்பட்டன. இக்காணொலிகளில் இவள் வலியினால் பிளிறி துடிக்கிறாள். இவ்வாறு அடித்து துன்புறுத்தப்பட்ட இடங்கள் யானைகள் புத்துணர்வு முகாம் மற்றும் புனிதம் நிறைந்த கிருஷ்ணண் கோயிலின் கருவறைக்கு அருகிலே என்பது முரண்பாடான உண்மையாகும்.

ஜெயமாலா றுவாழ்வு முகாமுக்கு கொண்டு செல்ல வேண்டும்: பீட்டா அமைப்பு கோரிக்கை
ஜெயமாலா யானையை மறுவாழ்வு முகாமுக்கு அனுப்புங்கள் - பீட்டா கோரிக்கை

பாரம்பரிய விலங்குகள் பணிக்குழு (ஹெரிடேஜ் அனிமல் டாஸ்க் ஃபோர்ஸ்) தொகுத்துள்ள புள்ளிவிவரங்களின்படி கடந்த 15 ஆண்டுகளில் கேரள மாநிலத்தில் மட்டும், சிறைப்பிடிக்கப்பட்ட யானைகளால் 526 நபர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விரக்தியடைந்த யானைகள் பலரும் தங்களது பாகன்களைக் கொன்ற பல்வேறு நிகழ்வுகள் தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய முழுவதிலும் பலமுறை நிகழ்ந்துள்ளது' என்றார்.

இதையும் படிங்க: அஸ்ஸாம் யானைகளை திருப்பி அனுப்புவதாக இல்லை: தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் பதில்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.