ETV Bharat / state

நகைக்கடன் தள்ளுபடி - மீண்டும் வாய்ப்பு!

author img

By

Published : Dec 30, 2021, 8:58 AM IST

நகைகடன் தள்ளுபடி
நகைகடன் தள்ளுபடி

ரேஷன் கார்டு, ஆதார் கார்டு விவரங்களை சரியாக தராதவர்கள் நகைக்கடன் தள்ளுபடி சலுகை பெற மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை : தேனியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் விழா நேற்று (டிச.30) நடைபெற்றது. இந்த விழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

அப்போது , "கூட்டுறவு வங்கிகளில் 40 கிராமிற்கு கீழ் தங்க நகைளை அடகு வைத்து கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி, கூட்டுறவு வங்கிகளில் நகைகடன் பெற்றுள்ள 35 லட்சம் பேரில் 13.5 லட்சம் பேருக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது” என்றார்.

இதனிடையே இந்த சலுகையை எதிர்பார்த்து காத்திருந்த பலரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதில், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு எண்ணை வழங்காதவர்கள், தவறாக வழங்கியவர்கள் என மேலும் பலரும் தள்ளுபடி சலுகை பெற தகுதி இல்லாதவர்கள் பட்டியலில் சேர்க்கப்படுவர் என்று கூறப்பட்டது.

இவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கும் விதமாக அமைச்சர் ஐ.பெரியசாமி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி,ரேஷன் கார்டு, ஆதார் கார்டு விவரங்களை சரியாக தராதவர்கள் நகைகடன் தள்ளுபடி சலுகை பெற மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சரியான விவரங்களை அளித்த பின்னர்,சரிபார்க்கப்பட்டு ஆய்வின் அடிப்படையில் கடன் தள்ளுபடி வழங்கப்படும். மேலும்,கூட்டுறவு வங்களில் வைத்தவர்களில் 10 லட்சத்து 18 ஆயிரத்து 66 பேருக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும்" என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : Tamilnadu Gold loan discount:நகைக்கடன் தள்ளுபடி - அரசாணை வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.