ETV Bharat / state

பட்டாசுகளை இப்படி வெடியுங்கள்... சத்யராஜ் மகள் கொடுக்கும் டிப்ஸ்!

author img

By

Published : Oct 27, 2019, 1:37 PM IST

Actor Sathyaraj's Daughter Divya

சென்னை: தீபாவளியை பாதுகாப்பாகக் கொண்டாட ஊட்டச்சத்து நிபுணரும், நடிகர் சத்யராஜின் மகளுமான திவ்யா சில டிப்ஸ்களை வழங்கியுள்ளார்.

பாதுகாப்பாக தீபாவளியைக் கொண்டாட ஊட்டச்சத்து நிபுணரும், நடிகர் சத்யராஜின் மகளுமான திவ்யா ஒரு செய்தி அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘நான் பட்டாசு வெடிப்பதில்லை. காரணம் ஒலி மாசுபாடு மற்றும் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. பட்டாசு புகையிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பது குறித்து சில வழிமுறைகளை கையாளலாம்’ என்று குறிப்பிட்டு அவர் வழங்கியுள்ள டிப்ஸ்:

  • பட்டாசு நம் கண்களில் படாமல் பாதுகாக்க, பிளைன் கண்ணாடி அணிந்து கொள்ளலாம்.
  • ஆஸ்துமா நோயாளிகள் புகையிலிருந்து தப்பிக்க முகத்தில் மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும்.
  • கர்ப்பிணி பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் பட்டாசு புகைகளைத் தவிர்க்க வேண்டும்.
  • புகையினால் ஏற்படும் அலர்ஜியைத் தவிர்க்க அதற்குரிய மாத்திரைகளை பயன்படுத்த வேண்டும்.
  • கண்களில் ஏற்படும் எரிச்சலைக் குறைக்க ஹைடிராப்ஸ் பயன்படுத்த வேண்டும்.

இதுபோன்ற பல குறிப்புகளை ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா வழங்கியுள்ளார்.

இதையும் படிக்க: தீபாவளி பண்டிகை: கோவையில் மக்கள் உற்சாகக் கொண்டாட்டம்

Intro:பாதுகாப்பான தீபாவளியை பாதுகாப்பாக தீபாவளியைக் கொண்டாட தருகிறார் ஊட்டச்சத்து நிபுணரும் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா.
Body:இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், நான் பட்டாசு வெடிப்பது இல்லை காரணம் சவுண்ட் பொல்யூஷன் ஏர் பொல்யூஷன் மற்றும் குழந்தைத் தொழிலாளர்கள் தான். ஆனால் பட்டாசு வெடிக்கக் கூடாது அதில் நியாயம் இல்லை ஆனால் பட்டாசு புகையில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பது குறித்து சில வழிமுறைகளை கையாளலாம் அவை பட்டாசு நம் கண்களில் படாமல் பாதுகாக்க பிளைன் கண்ணாடி அணிந்து கொள்ளலாம் ஆஸ்துமா நோயாளிகள் புகையில் இருந்து தப்பிக்க முகத்தில் மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் பட்டாசு புகை களை தவிர்க்க வேண்டும் வினால் ஏற்படும் அலர்ஜியைத் தவிர்க்க அதற்குரிய மாத்திரைகளை பயன்படுத்த வேண்டும் .Conclusion:கண்களில் ஏற்படும் எரிச்சலை குறைக்க ஹைடிராப்ஸ் பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல குறிப்புகளை ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா வழங்கியுள்ளார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.