ETV Bharat / state

11 மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கு நாளை எழுத்து தேர்வு; 17 ஆயிரத்து 171 பேர் போட்டி!

author img

By

Published : Apr 19, 2023, 10:35 PM IST

Etv Bharat
Etv Bharat

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 11 மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கான போட்டி தேர்வினை 17 ஆயிரத்து 171 பேர் நாளை ( ஏப்.20 ) எழுதுகின்றனர். 9801 பெண்கள் தேர்வினை எழுத உள்ளனர்.

சென்னை: பள்ளிக் கல்வித் துறையில் உள்ள குரூப் 1சி பிரிவில் மாவட்ட கல்வி அலுவலர் பணியில் 11 இடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பங்களைப் பெற்றது. இளநிலைப் பட்டம் மற்றும் கல்வியில் பட்டம் பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.

இந்த பணிக்காக 7 ஆயிரத்து 370 ஆண்களும் 9 ஆயிரத்து 801 பெண்களும் என 17 ஆயிரத்து 171 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்களுக்கான கம்ப்யூட்டர் மூலமாக முதல் நிலை தேர்வு நாளை ( ஏப்.20 ) காலை 9.30 மணி முதல் 12:30 மணி வரை 32 மையங்களில் தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது. சென்னையில் நான்கு இடங்களில் இவர்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது.

கம்ப்யூட்டர் பொருத்தப்பட்ட 97 அறைகளில் தேர்வு நடைபெறுகிறது. சென்னை மாவட்டத்தில் 4 மையங்களில் 2 ஆயிரத்து 637 பேர் தேர்வினை எழுத உள்ளனர். தமிழ்நாட்டில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாததால் போட்டித் தேர்வினை எழுதுவதற்கு அதிகளவில் ஆர்வத்துடன் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்கு அதிக அளவில் சேர்பவர்கள் சமீப காலமாக விண்ணப்பித்து வருகின்றனர். அதேபோல் ஆசிரியர் கல்வியியல் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாததால், நிர்வாகப் பணிக்கு செல்லவும் விருப்பப்பட்டு அதிகளவில் விண்ணப்பம் செய்துள்ளனர்.

மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு, தேர்வு எழுதுவதற்காக விடைத்தாள் திருத்தும் பணி மற்றும் தேர்வுப் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நீட் தேர்வு பயிற்சி மாணவர்கள் பாதிப்பு என்னும் ஈடிவி பாரத் செய்தி எதிரொலி; உடனடியாக கிடைத்த தீர்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.