ETV Bharat / state

சட்டப்பேரவை சிறப்பு கூட்டத் தொடரில் நிறைவேறிய 10 தீர்மானங்கள்! என்னென்ன தெரியுமா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 18, 2023, 8:25 PM IST

TamilNadu Chief Minister
தமிழ்நாடு முதலமைச்சர்

TamilNadu Chief Minister: சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று ( நவ.18) நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 தனித்தீர்மானங்களை முன் மொழிந்தார்.

சென்னை: தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று (நவ. 18) காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த தனித் தீர்மானம் ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றும் விதமாக முதலமைச்சர் முன்மொழிந்தார்.

அரசின் தனித் தீர்மானம்

1. பதினாறாவது சட்டமன்றப் பேரவையில் 25.4.2022 ஆம் நாளன்று அறிமுகம் செய்யப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு.

2. 5.5.2022 அன்று அறிமுகம் செய்யப்பட்டு, 10.5.2022 ஆம் நாளன்று ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக (திருத்தச்) சட்டமுன்வடிவு.

3. 9.5.2022 அன்று அறிமுகம் செய்யப்பட்டு, 10.5.2022 ஆம் நாளன்று ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், சென்னை (திருத்தச்) சட்டமுன்வடிவு.

4. 10.5.2022 அன்று அறிமுகம் செய்யப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் (திருத்தச்) சட்டமுன்வடிவு.

5. 18.10.2022 அன்று அறிமுகம் செய்யப்பட்டு, 19.10.2022 ஆம் நாளன்று ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் (இரண்டாம் திருத்தச்) சட்டமுன்வடிவு.

6. 19.10.2022 அன்று அறிமுகம் செய்யப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2022 ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழக (இரண்டாம்திருத்தச்) சட்டமுன்வடிவு.

7. 19.4.2023 அன்று அறிமுகம் செய்யப்பட்டு, 21.4.2023 ஆம் நாளன்று ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத் (திருத்தச்) சட்டமுன்வடிவு.

8. 20.4.2023 அன்று அறிமுகம் செய்யப்பட்டு, 21.4.2023 ஆம் நாளன்று ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் (திருத்தச்) சட்டமுன்வடிவு.

9. ஏற்கனவே 15 வது சட்டமன்றப் பேரவையில் 8.1.2020 ஆம் நாளன்று அறிமுகம் செய்யப்பட்டு 9.1.2020 ஆம் நாளன்று ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக (திருத்த )சட்ட முன்வடிவு.

10. 9.1 2020 அன்று அறிமுகம் செய்யப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு ஏற்றப்பட்ட 2020 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் திருத்த சட்டமுன்பதிவு.

சட்டப்பேரவையில் முன்மொழியப்பட்ட சட்டமுன் வடிவுகள் அனைத்தும் குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பின் பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படிங்க: முதலமைச்சரின் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம் - சபாநாயகர் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.