ETV Bharat / state

"நடப்பாண்டில் 50 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் இலக்கு" - ராதாகிருஷ்ணன்

author img

By

Published : Feb 18, 2023, 3:20 PM IST

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

நடப்பாண்டில் 50 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ராதாகிருஷ்ணன்

செங்கல்பட்டு: மதுராந்தகம் அடுத்த குன்னங்குளத்தூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை, கூட்டுறவுத்துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் இன்று (பிப். 18) திறந்து வைத்து பார்வையிட்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு, 43 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு முதலமைச்சர் ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, 50 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 37 ஆயிரத்து 628 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 2.25 லட்சம் டன் நெல் விளைவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் விவசாயிகளின் சொந்தத் தேவைகள் போக 1.8 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும். அரிசி கடத்தல் உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க, அருண் ஐபிஎஸ் தலைமையில் தனி அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு, இன்று முதல் டெல்டா மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.

நெல் கொள்முதல் செய்யும் போது மூட்டைக்கு 50 ரூபாய் பணம் வசூலிக்கப்படுவதாக எழும் குற்றச்சாட்டுகள் குறித்தும், இந்த குழு தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும். கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் அளிக்கப்படும் கடன் தொகையின் அளவானது, ரூ.12 ஆயிரம் கோடி என்ற சாதனை அளவை எட்டியுள்ளது. மாவட்ட, தாலுகாக்கள் வாரியாக நெல் கொள்முதல் செய்து சேமிக்கும் கிடங்கு வசதிகள் விரைவில் ஏற்படுத்தப்படும்" என்றார்.

இதையும் படிங்க: குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மதுரை வந்தடைந்தார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.