ETV Bharat / state

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் 50 சதவீதம் பேர் மட்டும் பணியாற்ற அனுமதி

author img

By

Published : Jan 18, 2022, 5:31 PM IST

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் 50 சதவீதம் பேர் மட்டும் பணியாற்ற அனுமதி
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் 50 சதவீதம் பேர் மட்டும் பணியாற்ற அனுமதி

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றும் மேல் மட்ட அலுவலர்கள், பிற ஊழியர்களில் 50 சதவீத பேர் மட்டும் சுழற்சி முறையில் பணியாற்ற அனுமதியளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை: சென்னை விமானநிலையத்தில் நிா்வாகம், எலக்ட்ரிக்கல், டெக்னிக்கல், கிரவுண்ட் ஆப்ரேசன், ஃபயா், ஹவுஸ் கீப்பிங் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சுமாா் 1,500 விமான நிலைஒய மேல் அலுவக்லர்கள் மற்றும் பிற ஊழியா்கள் பணியாற்றுகின்றனா்.

கரோனாத் தொற்று மற்றும் ஒமைக்ரான் சமீப காலத்தில் வேகமாக பரவிவருகிறது.சென்னை விமானநிலையத்திலும் மேல் ஊழியா்கள்,ஏா்லைன்ஸ் ஊழியா்கள்,பாதுகாப்பு படையினா்,காவல்துறையினர் உள்ளிட்ட சுமாா் 70ற்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதையடுத்து,சென்னை விமானநிலையத்தில் பணியாற்றும் விமான நிலைய ஊழியா்கள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அவா்களில் சுழற்சி முறையில் 50 சதவீதம் ஊழியா்களே பணிக்கு வரவேண்டும் என்று விமான நிலைய நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

விமான நிலைய ஊழியா்கள் வழக்கமாக வாரத்திற்கு 48 மணி நேரம் பணிக்கு வந்துகொண்டிருந்தனா். இனிமேல் வாரத்திற்கு 24 மணி நேரம் மட்டும் பணிக்கு வந்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ்,ஒமைக்ரான் பரவலை தடுக்க நிா்வாகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்,மறு உத்தரவு வரும்வரை இந்த இந்த ஏற்பாடுகள் அமுலில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

கரோனா வைரஸ் முதல் அலை பரவிய 2020, இரண்டாம் அலை பரவிய 2021 ஆகிய ஆண்டுகளிலும் இதைப்போன்று 50 சதவீத ஊழியா்கள் சுழற்சி முறையில் பணியாற்றும் முறை அமல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு உயருமா ? 3 நாட்களில் தெரியவரும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.