ETV Bharat / sports

Tokyo Olympics: இறுதிவரை போராடி தோற்றார் புனியா; வெண்கலம் ஜஸ்ட்-மிஸ்!

author img

By

Published : Aug 5, 2021, 5:58 PM IST

Deepak Punia, தீபக் புனியா
Deepak Punia loses bronze medal bout in dying seconds

ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெண்கலத்திற்கான போட்டியில் இந்தியாவின் தீபக் புனியா, சான் மாரினோ நாட்டு வீரரிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.

டோக்கியோ: ஒலிம்பிக் தொடரின் மல்யுத்தம் 86 கிலோ ஃப்ரீ-ஸ்டைல் பிரிவில் வெண்கலத்திற்கான போட்டி இன்று (ஆக.5) நடைபெற்றது.

இதில், இந்தியாவின் தீபக் புனியா, சான் மரினோ நாட்டைச் சேர்ந்த மைல்ஸ் அமின் உடன் மோதினார்.

இறுதிநேர இழப்பு

இந்தப் போட்டியின் முதற்பகுதியில், புனியா 2-0 என்ற புள்ளிகளில் முன்னிலைப் பெற்று எதிராளிக்கு அழுத்தத்தைக் கொடுத்தார். தொடர்ந்து, அமின் ஒரு புள்ளியைப் பெற கடைசி மூன்று நிமிடத்தில் 2-1 என்ற கணக்கில் ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது.

ஆனால், இறுதிநேரத்தில் புனியாவை முழுமையாக ஆக்கிரமித்த அமின், அடுத்தடுத்து மூன்று புள்ளிகளைப் பெற்றார். இதையடுத்து, 2-4 என்ற புள்ளிக்கணக்கில் புனியா அமினிடம் வீழ்ந்து வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்டார்.

இந்தியா இன்று...

இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் வெண்கலம், மல்யுத்த வீரர் ரவிக்குமார் தாஹியாவின் வெள்ளி என இந்தியா இன்று மட்டும் இரண்டு பதக்கங்களை வென்றுள்ளது. நடப்பு ஒலிம்பிக்கில் இரண்டு வெள்ளி, மூன்று வெண்கலம் என ஐந்து பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க: ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி... வெற்றியின் இறுதி நிமிடங்கள்: கண்டுகளித்த வருண் குமாரின் குடும்பத்தினர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.