ETV Bharat / sports

டோக்கியோ ஒலிம்பிக் 15ஆவது நாள் அட்டவணை: தமிழ்நாடு வீரர்கள் பங்கேற்கும் போட்டி எப்போது?

author img

By

Published : Aug 5, 2021, 10:47 PM IST

டோக்கியோ ஒலிம்பிக் 15ஆவது நாள் அட்டவணை
டோக்கியோ ஒலிம்பிக் 15ஆவது நாள் அட்டவணை

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கத்திற்கு மோதும் போட்டி நாளை (ஆக.6) காலை 7:00 மணிக்கும், தமிழ்நாடு வீரர்களான நாகநாதன் பாண்டி, ஆரோக்கிய ராஜிவ் ஆகியோர் பங்கேற்கும் தடகளப் போட்டி மாலை 5:07 மணிக்கும் தொடங்குகிறது.

டோக்கியோ: ஒலிம்பிக்கின் 15ஆவது நாளில் (ஆக.6) இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகளின் முழுமையான அட்டவணை கீழ்க்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது (அனைத்தும் இந்திய நேரப்படி).

ஆடவர் 50கி.மீ நடை பந்தயப்போட்டி

குர்பிரீத் சிங் - இறுதிச்சுற்று - அதிகாலை 2:00

கோல்ஃப்

அதிதி அசோக், திக்ஷா டாகர் - மகளிர் தனிநபர் ஸ்ட்ரோக் ப்ளே மூன்றாம் சுற்று - அதிகாலை 4:00

மகளிர் 20 கி.மீ நடை பந்தயப்போட்டி

பாவனா ஜாட், பிரியங்கா கோஸ்வாமி - இறுதிச்சுற்று - மதியம் 1:00

ஹாக்கி

இந்தியா vs இங்கிலாந்து - மகளிர் ஹாக்கி: வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி - காலை 7:00

மல்யுத்தம்

பங்ரஜ் புனியா vs அக்மதாலீவ் (கிர்கிஸ்தான்) - ஆடவர் ப்ரீ-ஸ்டைல் 65 கிலோ ரவுண்ட் ஆஃப் 8 - காலை 8:00

சீமா பிஸ்லா vs சார்ரா ஹம்டி (துனிசியா) - மகளிர் ப்ரீ-ஸ்டைல் 50 கிலோ ரவுண்ட் ஆஃப் 8 - காலை 8:00

தடகளம்

அமோஜ் ஜேகப், நாகநாதன் பாண்டி, ஆரோக்கிய ராஜிவ், நிர்மா நூஹ் டாம், முகமது அனஸ் - ஆடவர் 4x400 தொடர் ஓட்டப்பந்தயம்: ஹீட் 2 - மாலை 5:07

இதையும் படிங்க: ஒலிம்பிக்கில் ஹாட்ரிக் கோல் அடித்தும்... துரத்தும் சாதிய வன்மம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.