ETV Bharat / sports

“பதக்கம், வெற்றியை விரும்புறோம், கூட்டு முயற்சி இல்லை” - கிரன் ரிஜிஜூ

author img

By

Published : Jul 13, 2020, 9:31 AM IST

we-just-want-medals-results-but-do-no-collective-effort-says-kiren-rijiju
we-just-want-medals-results-but-do-no-collective-effort-says-kiren-rijiju

பதக்கம், வெற்றியை விரும்பும் நம்மிடம் கூட்டு முயற்சி இல்லையென மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறினார்.

மும்பையில் நடைபெற்ற உயர் செயல்திறன் விளையாட்டு திட்ட விழாவில் இந்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரன் ரிஜிஜூ பேசுகையில், “இந்தியர் அனைவரும் பதக்கம் வெல்வதையும், முடிவுகளை (வெற்றி) பெறுவதிலும், கொண்டாட்டத்தையும் விரும்புகிறோம். ஆனால் அதற்கான எந்தவொரு தேசிய அளவிலான கூட்டு முயற்சியும் நம்மிடம் இல்லை. இது வெற்றிக்கான முடிவுகளை எளிதில் மாற்றிவிடும். காரணம் இந்தியாவின் ஒலிம்பிக் பதக்கங்களின் எண்ணிக்கையை பார்த்தால் உங்களுக்கு அது புரியும்.

ஏனெனில் இந்தியா போன்ற ஒரு மிகப்பெரும் நாட்டிற்கு இது மகிழ்ச்சியான செய்தியல்ல. இதற்கான காரணம் நம்மிடம் விளையாட்டு கலாசாரம் என்பதே இல்லை” என்றார்.

மேலும், “விளையாட்டு வீரர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் இடையே ஏற்படும் குழப்பங்கள் இருக்கும் வரை நாம் எவ்வாறு முன்னேறுவோம்” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: 'டிஆர்எஸ் விதியில் மாற்றத்தை கொண்டுவாருங்கள்' ஐசிசிக்கு சச்சின் ஆலோசனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.