ETV Bharat / sports

#Rugbyworldcup: காலிறுதியில் வெல்லப்போவது யார்?

author img

By

Published : Oct 19, 2019, 1:20 PM IST

rugby-world-cup-quarterfinals-updates

டோக்கியோ: ஜப்பானில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை ரக்பி தொடரின் முதலாவது மற்றும் இரண்டாவது காலிறுதிச்சுற்று போட்டிகள் இன்று தொடங்கவுள்ளன.

#Rugbyworldcup: இந்தாண்டிற்கான உலகக்கோப்பை ரக்பி தொடர் ஜப்பான் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றது. 20 அணிகள் பங்கு பெற்ற இந்தத் தொடர் குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி, குரூப் டி என நான்கு குழுக்களாகப் பிரிந்து லீக் ஆட்டங்களில் மோதின.

தற்போது இத்தொடரின் லீக் ஆட்டங்கள் முடிந்து ஒவ்வொரு குரூப்பிலிருந்தும் முதல் இரு இடங்களைப் பிடித்த அணிகள் காலிறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியுள்ளன. இதில் இன்று நடைபெறவுள்ள முதல் காலிறுதிச் சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா அணியையும், இரண்டாவது காலிறுதிச்சுற்றில் நடப்பு சாம்பியன் நியூசிலாந்து அணி ஐயர்லாந்து அணியையும் எதிர்கொள்ளவுள்ளனர்.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா!

உலகக்கோப்பை ரக்பி தொடரின் முதலாவது காலிறுதியில் மோதவுள்ள இங்கிலாந்து அணி நடப்பு தொடரின் லீக் ஆட்டத்தில் குரூப் சி பிரிவில் இடம்பிடித்திருந்தது. இதில் நாடைபெற்ற அனைந்து போட்டிகளில் வெற்றி பெற்று குரூப் சி பிரிவில் 17 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது.

அதேபோல் குரூப் டி பிரிவில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலியா அணி இத்தொடரில் எதிர்கொண்ட நான்கு லீக் ஆட்டங்களில் மூன்றில் வெற்றியையும், ஒரு போட்டியில் தோல்வியையும் சந்தித்தது. இதன் மூலம் குரூப் டி பிரிவில் ஆஸ்திரேலிய அணி 16 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்தது.

இவ்விரு அணிகளும் இந்த உலகக்கோப்பை ரக்பி தொடரில் லீக் ஆட்டங்களில் மூன்று வெற்றியை பெற்று சமநிலையான பலத்துடன் இருப்பதினால் காலிறுதியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

நியூசிலாந்து-ஐயர்லாந்து!

இன்று நடைபெறும் மற்றொரு உலகக்கோப்பை ரக்பி தொடரின் காலிறுதி ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள நடப்பு சாம்பியனான நியூசிலாந்து அணி, குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள ஐயர்லாந்து அணியை எதிர்கொள்ளவிருக்கிறது.

நியூசிலாந்து அணியை பொறுத்த வரையில் இத்தொடரில் பங்கெடுத்த மூன்று போட்டிகளிலும் எதிரணியை எளிதில் வீழ்த்தி வெற்றிபெற்றது. ஆனால் ஐயர்லாந்து அணியை பொறுத்த வரையில் இத்தொடரில் பங்கெடுத்த நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றியையும், ஒரு போட்டியில் தோல்வியையும் சந்தித்தது.

இதனால் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை இன்று ஐயர்லாந்து அணி எப்படி சமாளிக்கப் போகிறது என்ற விறுவிறுப்பு ரசிகர்கள் மனதில் பேரார்வத்தை தூண்டியுள்ளது.

இதையும் படிங்க: சைக்கிள் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற ரொனால்டோ!

Intro:Body:

Rugby world cup quarter finals - Eng vs Aus and Nz vs Ire


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.