ETV Bharat / sports

வரலாற்றில் முதல் முறையாக 100 பதக்கங்களை வென்ற இந்தியா - பிரதமர் மோடி வாழ்த்து!

author img

By PTI

Published : Oct 7, 2023, 8:55 AM IST

Updated : Oct 7, 2023, 9:18 AM IST

Etv Bharat
Etv Bharat

India's 100th medal at the Asian Games: ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா வரலாற்றிலேயே முதல் முறையாக 100 பதக்கங்களை வென்றுள்ளது.

ஹாங்சோ (சீனா): ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், இன்று (அக்.7) நடைபெற்ற பெண்கள் கபாடி பிரிவில் இந்திய பெண்கள் கபாடி அணி தங்கப்பதக்கத்தை வென்று உள்ளது. சீனாவை 26-25 என்ற புள்ளிக் கணக்கில் வென்றதன் மூலம், இந்தியா தனது தங்கப்பதக்க வேட்டையத் தொடர்கிறது. அதிலும், ஆட்டத்தின் கடைசி இரண்டு ரைடில் இந்திய வீராங்கனைகள் த்ரில்லிங்கான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

அதிலும், கபாடி வீராங்கனை பூஜாவின் அபாரமான ரைடில் இந்தியா, ஆட்டத்தின் பாதி நேரத்திலேயே 5 புள்ளிகள் முன்னிலை வகித்தது. அதேநேரம், இந்த ஆட்டத்தின் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 100 பதக்கங்களைக் கடந்துள்ளது. இந்த சாதனையை வரலாற்றிலேயே முதன் முறையாக இந்தியா படைத்துள்ளது. இதன்படி, இதுவரை இந்தியா 25 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலம் ஆகியவற்றுடன் சர்வதேச அரங்கில் ஜொலித்து வருகிறது.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டு உள்ள தனது X வலைத்தளப் பதிவில், “ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மிகப்பெரிய சாதனை. 100 பதக்கங்கள் என்ற குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியதில் இந்திய மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இந்தியாவிற்கான இந்த வரலாற்று மைல்கல்லுக்கு வழிவகுத்த நமது அற்புதமான விளையாட்டு வீரர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • A momentous achievement for India at the Asian Games!

    The people of India are thrilled that we have reached a remarkable milestone of 100 medals.

    I extend my heartfelt congratulations to our phenomenal athletes whose efforts have led to this historic milestone for India.… pic.twitter.com/CucQ41gYnA

    — Narendra Modi (@narendramodi) October 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பிரமிக்க வைக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் சரித்திரம் படைத்து, நம் இதயங்களை பெருமையால் நிரப்பியது. வருகிற 10ஆம் தேதி நமது ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்கும், எங்கள் விளையாட்டு வீரர்களுடன் உரையாடுவதற்கும் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என குறிப்பிட்டு உள்ளார்.

  • It is a historic moment for India at the Asian Games. Our Kabaddi Women's team has clinched the Gold! This victory is a testament to the indomitable spirit of our women athletes. India is proud of this success. Congrats to the team. My best wishes for their future endeavours. pic.twitter.com/amfPaGmiHt

    — Narendra Modi (@narendramodi) October 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும், ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பெண்கள் கபாடி அணிக்கு, “ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு இது ஒரு வரலாற்று தருணம் ஆகும். தங்கம் வென்றது நமது மகளிர் கபாடி அணி. இந்த வெற்றி, நமது வீராங்கனைகளின் அசைக்க முடியாத மனப்பான்மைக்குச் சான்றாகும். இந்த வெற்றியால் இந்தியா பெருமிதம் கொள்கிறது. கபாடி அணிக்கு வாழ்த்துகள். உங்களின் எதிர்கால முயற்சிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்” எனவும் பிரதமர் மோடி தனது சமூக வலைத்தளப் பக்கத்தின் மூலம் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: ஆசிய விளையாட்டுப் போட்டி; வில்வித்தையில் தங்கம், வெண்கலம் வென்ற வீராங்கனைகள்!

Last Updated :Oct 7, 2023, 9:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.