ETV Bharat / sports

'ஒலிம்பிக்கில் சிறிதளவு வித்தியாசம் கூட தலையெழுத்தை மாற்றும்'- அபிநவ் பிந்ரா!

author img

By

Published : Jul 12, 2020, 4:35 AM IST

in-an-olympic-final-its-that-1-percent-edge-that-makes-all-the-difference-bindra
in-an-olympic-final-its-that-1-percent-edge-that-makes-all-the-difference-bindra

ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் எல்லோரும் போட்டியிடத் தயாராக இருக்கும்போது, ​ஒரு விழுக்காடு வித்தியாசம் தான் அனைவரின் தலையெழுத்தை மாற்றுகிறது என இந்தியாவின் முன்னாள் துப்பாக்கி சுடுதல் வீரர் அபிநவ் பிந்ரா தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற விழா ஒன்றில் இந்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரேன் ரிஜுஜூ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பேசிய அபிநவ் பிந்ரா, 'உயர் செயல்திறன் விளையாட்டு என்பது ஒரு எளிய கருத்தாகும். இது திறமையை அடையாளம் காண்பதற்கும், பயிற்சி மற்றும் தடகள திறன்களை மேம்பாடுத்துவதற்கும் சிறந்த வழிமுறையாகும்.

மேலும் ஒலிம்பிக் விளையாட்டின் இறுதிப் போட்டியில் எல்லோரும் போட்டியிடத் தயாராக இருக்கும்போது, ​ஒரு விழுக்காடு விழிம்புதான் எல்லா வித்தியாசங்களையும் ஏற்படுத்துகிறது.

அந்த வித்தியாசமானது ஒருவரின் தலையெழுத்தையும் மாற்றக்கூடிய ஒன்று. எனவே இந்த உயர் செயல்திறன் விளையாட்டு பயிற்சியில் பங்கேற்பதன் மூலம், தங்களின் விளையாட்டு திறனையும், உலகளாவிய சிறந்த பயிற்சியையும் இது ஊக்குவிக்கும்' என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த உயர் திறன் விளையாட்டு திட்டத்தில் தற்போது 50 பேருடன் தொடங்கவுள்ளதாகவும், இனி வரும் நாட்களில் இத்திட்டத்தை விரிவு படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்திய விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: சீனாவின் முடிவிற்காக காத்திருக்கும் சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.