ETV Bharat / sports

"4 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாய்ப்பு... 100% உழைப்பையும் போடுவேன்.. பயிற்சிக்காக வெளிநாடு செல்கிறேன்" - நீரஜ் சோப்ரா!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 26, 2023, 5:28 PM IST

Neeraj Chopra
Neeraj Chopra

2024ஆம் ஆண்டு பாரீஸில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில், வெளிநாட்டிற்கு சென்று பயிற்சி மேற்கொள்ள இருப்பாதாக இந்திய நட்சத்திர தடகள வீரரான நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

பானிபட்: 2024 ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில், ஈட்டி ஏறிதலில் உலக சாம்பியன், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா, பாரீஸ் ஒலிம்பிக் 2024 குறித்து பேசியுள்ளார்.

"பாரீஸ் ஒலிம்பிக் தொடருக்கான பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளேன். பதக்கம் வெல்ல அனைத்து விதத்திலும் முயற்சி செய்வேன். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வாய்ப்பு கிடைக்கும் என்பதால் எனது சிறந்த ஆட்டத்தை ஒலிம்பிக் போட்டியில் வெளிப்படுத்துவேன். அதற்காக வெளிநாடு சென்று பயிற்சி மேற்கொள்கிறேன்.

  • #WATCH | Panipat, Haryana: On the Paris 2024 Olympics, Ace javelin thrower Neeraj Chopra says, "I will start my preparation for the Paris Olympics and for that, I will go abroad. I will give 100 per cent to win a medal for the country ..." pic.twitter.com/BXjBI8k8dT

    — ANI (@ANI) November 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

நாட்டிற்காக பதக்கத்தை வெல்ல 100 சதவிதம் களத்தில் எனது பங்களிப்பை கொடுப்பேன்" என தெரிவித்துள்ளார். நீரஜ் சோப்ரா கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் அவர் உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

விளையாட்டு துறையில் நீரஜ் சோப்ராவின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், அவருக்கு மத்திய அரசு பத்ம ஸ்ரீ மற்றும் மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது வழங்கி கவுரவித்தது. ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டு, உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப் பதக்கத்துடன் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு செல்லும் நீரஜ் சோப்ரா பாரீஸ் ஒலிம்பிக்கிலும் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கடந்த 2021 டோக்கியோ ஒலிம்பிக்கை காட்டிலும் பாரீஸ் ஒமிம்பிக் தொடரில் அதிகம் தங்கம் வெல்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பயிற்சிகளை வீரர்கள் முறையாக மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: U19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.