ETV Bharat / sports

Ind vs Afg 1st t20 : விராட் கோலி விலகல்! இதுதான் காரணமா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 10, 2024, 6:14 PM IST

Virat Kohli not available for first T20I againist afghanistan
Virat Kohli not available for first T20I againist afghanistan

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் தொடரில் நட்சத்திர வீரர் விராட் கோலி விளையாட மாட்டார் என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்து உள்ளார்.

மொஹாலி : இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி நாளை (ஜன. 11) பஞ்சாப்பின், மொஹாலி மைதானத்தில் நடைபெறுகிறது.

ஏறத்தாழ 14 மாத இடைவெளிக்கு பின்னர் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி இந்திய அணிக்கு திரும்புவதால் மைதானத்தில் அவர்களை காண ரசிகர்கள் பேராவல் கொண்டு இருந்தனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி விளையாட மாட்டார் என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்து உள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியை விராட் கோலி தவறவிடுவதாக ராகுல் டிராவிட் கூறி உள்ளார். ஏறத்தாழ 14 மாத இடைவெளிக்கு பின்னர் விராட் கோலி டி20 கிரிக்கெட் விளையாடுவதை எதிர்நோக்கி காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : இந்தியா - ஆப்கானிஸ்தான் முதலாவது டி20 கிரிக்கெட் நடைபெறுமா? திடீர் சிக்கல்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.