ETV Bharat / sports

IPL 2022 AUCTION: சென்னையின் முயற்சி வீண்; பஞ்சாப் அணியில் தமிழர் ஷாருக் கான்

author img

By

Published : Feb 12, 2022, 12:05 PM IST

Updated : Feb 12, 2022, 7:53 PM IST

IPL 2022 auction, IPL auction 2022 live, New teams in ipl 2022, IPL 2022 mega auction news, IPL 2022 live updates, IPL 2022 players list, Chennai Super Kings, Royal Challengers Bangalore, Rajasthan Royals, Mumbai Indians, Kolkata Knight Riders, Gujarat Titans, Lucknow Super Giants, Delhi Capitals, Sunrisers Hyderabad, Punjab Kings, CSK BIDDED PLAYERS, MI BIDDED PLAYERS, PBKS BIDDED PLAYERS, SRH BIDDED PLAYERS, KKR BIDDED PLAYERS, DC BIDDED PLAYERS, RCB BIDDED PLAYERS, RR BIDDED PLAYERS, LSG BIDDED PLAYERS, GT BIDDED PLAYERS
IPL MEGA AUCTION 2022

19:42 February 12

சென்னையின் முயற்சி வீண்; பஞ்சாப் அணியில் தமிழர் ஷாருக் கான்

தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிரடி வீரர் ஷாருக் கானை ஏலத்தில் எடுக்க சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இரு அணியும் மாறி மாறி ஏலம் கேட்ட நிலையில், இறுதியாக பஞ்சாப் அணி ரூ.9 கோடிக்கு ஷாருக் கானை வாங்கியுள்ளது.

19:28 February 12

மும்பையில் பேபி ஏபிடி; ஹைதராபாத் பறந்த ராகுல் திரிபாதி

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இளம் வீரர் டிவால்டு பெர்விஸை ரூ.3 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது. 18 வயதான இவர் U-19 உலகக் கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடினார்.

இந்திய பேட்ஸ்மேன் ராகுல் திரிபாதியை ரூ.8.5 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி வாங்கியுள்ளது.

19:15 February 12

ரூ.6.5 கோடிக்கு சஹால்லை வாங்கிய ராஜஸ்தான்

இந்தியா சுழற்பந்து வீச்சாளர் சஹாலை ரூ.6.5 கோடி ராஜஸ்தான் ராயல் அணி வாங்கியுள்ளது. மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவை ரூ.2 கோடிக்கு டெல்லி அணி வாங்கியுள்ளது.

வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் ரூ.4.2 கோடிக்கு சன் ரைசர்ஸ் அணியும், வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுரை டெல்லி அணி ரூ.2 கோடிக்கும் வாங்கியுள்ளது. ராகுல் சஹாரை ரூ.5.5 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியுள்ளது.

18:35 February 12

எந்த அணியில் மார்க் வுட், ஹேசல்வுட்

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்டை ரூ.7.5 கோடிக்கு லக்னோ அணியும், ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட்டை ரூ.7.75 கோடிக்கு ஆர்சிபி அணியும் வாங்கியுள்ளனர்.

18:32 February 12

சர்துல் தாக்கூரை தூக்கிய டெல்லி அணி

வேகப்பந்து வீச்சாளர் சர்துல் தாக்கூரை ரூ.10.75 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி வாங்கியுள்ளது.

18:27 February 12

பரிஷித் கிருஷ்ணா, பெர்குசனுக்கு ரூ.10 கோடி

வேகப்பந்து வீச்சாளர்கள் பரிஷித் கிருஷ்ணாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், லாக்கி பெர்குசனை குஜராத் டைட்டான்ஸ் அணியும் ரூ.10 கோடிக்கு வாங்கியுள்ளன.

17:28 February 12

தீபக் சஹாரை வாங்கிய சி.எஸ்.கே.

வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹாரை ரூ.14 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது.

17:22 February 12

நட்ராஜனுக்கு ரூ.4 கோடி

இந்திய இடதுகை வேகப்பந்துவீச்சாளர் நடராஜனை ரூ. 4 கோடி கொடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியுள்ளது.

17:00 February 12

பூரனை தூக்கியது ஹைதராபாத்

மேற்கிந்திய தீவுகள் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரனை ரூ. 10.75 கோடி கொடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியுள்ளது.

16:43 February 12

பஞ்சாப்புக்கு பேர்ஸ்டோவ்; பெங்களூருவுக்கு தினேஷ் கார்த்திக்

இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோவை ரூ. 6.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியும், இந்திய விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக்கை ரூ. 5.50 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் எடுத்துள்ளது. மேலும், விருத்திமான் சாஹா, இங்கிலாந்து விக்கெட் கீப்பர் சாம் பில்லிங்ஸ் ஆகியோரை யாரும் ஏலம் எடுக்கவில்லை.

16:28 February 12

இஷானுக்கு அடித்தது ஜாக்-பாட்

இந்திய இடதுகை பேட்ஸ்மேன் இஷான் கிஷனை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 15.25 கோடிக்கு எடுத்துள்ளது. முதலில் மும்பையுடன் குஜராத் போட்டியிட்டது.

ஒருகட்டத்தில் குஜராத் வெளியேற, அந்த இடத்திலிருந்து ஹைதராபாத் நுழைய தொடங்கியது. இருப்பினும், ரூ. 15 கோடி வரை துணிச்சலாக வந்த ஹைதராபாத் அணி உரிமையாளர் காவ்யா மாறன், அதன்பின்னர் பின்வாங்க இஷானை மீண்டும் மும்பை கூடாரமே வலைத்துப்போட்டுவிட்டது.

16:18 February 12

மீண்டும் வலுப்பெறுகிறது சிஎஸ்கே!

இந்திய வீரர் அம்பதி ராயுடுவை ரூ. 6.25 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் எடுத்துள்ளது. அவரின் அடிப்படை ரூ. 2 கோடியாகும். மேலும், ராபின் உத்தப்பா, டேரன் பிராவோ தற்போது ராயுடு என சென்னை அணி தனது பழைய வீரர்களையே தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

16:15 February 12

முடிந்தது ஆல்-ரவுண்டர் முதல் செட்

ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷை ரூ. 6.50 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் வாங்கியுள்ளது. அடுத்து வந்த ஆப்கன் வீரர் முகமது நபியை யாரும் ஏலம் எடுக்கவில்லை. மேலும், ஆல்-ரவுண்டர்களின் முதல் செட் (AL-1) வீரர்களுக்கான ஏலம் நிறைவுபெற்றது. இதையடுத்து, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களின் செட் ஏலம் விடப்பட உள்ளது.

16:08 February 12

குர்னாலை கிளிக் செய்த லக்னோ

இந்திய ஆல்-ரவுண்டர் குர்னால் பாண்டியாவை லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி ரூ. 8.25 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

16:07 February 12

எஸ்ஆர்ஹெச் வாங்கிய முதல் வீரர்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்திய வலதுகை சுழற்பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் ரூ. 8.75 கோடிக்கு வாங்கியுள்ளது.

16:04 February 12

ஹசரங்காவுக்கு ரூ. 10.75 கோடி

இலங்கை வீரரும், டி20 போட்டிகளின் நம்பர் 1 சுழற்பந்துவீச்சாளருமான வஹிந்து ஹசரங்காவை ரூ. 10.75 கோடிக்கு பெங்களூரு அணி மீண்டும் தக்கவைத்துள்ளது.

15:47 February 12

மீண்டும் தொடங்கியது ஏலம்

ஏலம் விடுபவரான ஹக் எட்மீட்ஸ் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்ததால் மயக்கம் போட்டு கீழே விழுந்தார். இந்நிலையில், அவருக்கு பதிலாக ஏலம் விட கிரிக்கெட் வர்ணனையாளர் சாரு சர்மாவை பிசிசிஐ நியமித்தது. ஏலம் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கியது.

14:15 February 12

10 கோடியில் ஹசரங்கா... மயக்கம் போட்ட ஏலம் விடுபவர்!

இலங்கை சுழற்பந்துவீச்சாளர் வஹிந்து ஹசரங்காவை பெங்களூரு, பஞ்சாப், ஹைதராபாத் ஆகிய அணிகள் விறுவிறுப்பாக ஏலம் எடுத்துக்கொண்டிருக்கையில், ஏலம் விடும் ஹக் எட்மீட்ஸ் மயக்கம் போட்டு விழுந்தார். இதனால், ஏலம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, பிற்பகல் 3.30 மணிக்கு மீண்டும் ஏலம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

14:01 February 12

ஹால்டரை அடுத்து ஹூடாவையும் தூக்கிய லக்னோ

இந்திய பேட்ஸ்மேன் தீபக் ஹூடாவை ரூ. 5.75 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வாங்கியுள்ளது. இதன் முன்னர், மேற்கிந்திய ஆல்-ரவுண்டர் ஜேசன் ஹோல்டரை லக்னோ அணி ரூ. 8.75 கோடிக்கு எடுத்தது குறிப்பிடத்தக்கது.

13:57 February 12

அதிரவைத்த ஹர்ஷல் - மீண்டும் ஆர்சிபியில்...

கடந்த ஐபிஎல் சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்ஷல் படேலை ரூ. 10.75 கோடி கொடுத்து பெங்களூரு அணியே மீண்டும் வாங்கியுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தொடர்ந்து படேலை கைப்பற்ற ஏலம் கோட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

13:51 February 12

ராணாவையும் தக்கவைத்தது கேகேஆர்!

இந்திய பேட்ஸ்மேன் நிதீஷ் ராணாவை ரூ. 8 கோடிக்கு கொல்கத்தா அணி தக்கவைத்துள்ளது. இதற்கு முன்னர், கேகேஆர் பாட் கம்மின்ஸை ரூ. 7.25 கோடிக்கு தக்கவைத்தது குறிப்பிடத்தக்கது.

13:47 February 12

சிஎஸ்கேவை விட்டுப்பிரியாத ப்ராவோ

மேற்கிந்திய ஆல்-ரவுண்டர் டூவைன் பிராவோவை ரூ. 4.40 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைத்துள்ளது.

13:43 February 12

UNSOLD: ரெய்னா, ஸ்மித், மில்லர்

இந்திய பேட்ஸ்மேன் ரெய்னா, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித், தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் டேவிட் மில்லர், வங்கதேச ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹாசன் ஆகியோரை முதல் கட்டமாக எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. இவர்களுக்கு மற்றொரு வாய்ப்பும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

13:42 February 12

படிக்கலையும் பக்கெட்டில் போட்ட ராஜஸ்தான்

இந்தியாவின் இளம் ஓப்பனிங் பேட்ஸ்மேனான தேவ்தத் படிக்கலை ரூ. 7.75 கோடிக்கு ராஜஸ்தான் அணி வாங்கியுள்ளது. மேலும், அந்த அணியில் ஜாஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் என இரு ஓப்பனர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

13:30 February 12

ANBUDENஇல் மீண்டும் உத்தப்பா

இந்தியாவைச் சேர்ந்த அனுபவ வீரர் ராபின் உத்தப்பாவை அவரின் அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்துள்ளது. மேலும், ரூ. 4.60 கோடிக்கு மணீஷ் பாண்டேவை லக்னோ அணியும், ரூ. 8.50 கோடிக்கு ஹெட்மயரை ராஜஸ்தானும், ஜேசன் ராயை அவரின் அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கு குஜராத் அணியும் ஏலம் எடுத்துள்ளன.

13:20 February 12

வீரர்களை எடுக்காத மூன்று அணிகள்

ஐபிஎல் மெகா ஏலத்தில் 10 மார்க்கீ வீரர்களை பல்வேறு அணிகள் ஏலம் எடுத்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இதில் எந்த வீரரையும் ஏலம் எடுக்கவில்லை. அதனால், சென்னை, மும்பை அணிகள் ரூ. 48 கோடிகளுடனும், ஹைதராபாத் ரூ. 68 கோடியுடனும் ஏலத்தில் நீடிக்கின்றன.

12:58 February 12

டெல்லியில் டேவிட் வார்னர்

ஆஸ்திரேலிய இடதுகை பேட்ஸ்மேன் டேவிட் வார்னரை டெல்லி கேப்பிடல்ஸ் அணி ரூ. 6.25 கோடிக்கு எடுத்துள்ளது. இதன்மூலம், முக்கிய வீரர்கள் எனும் மார்க்கீ வீரர்களுக்கான செட் முடிவு பெற்றது. ஸ்ரேயஸ் ஐயர் ரூ. 12.25 கோடி பெற்று இந்த பிரிவில் அதிக தொகைக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

12:45 February 12

லக்னோவில் டி காக்; குஜராத்தில் ஷமி

தென்னாப்பிரிக்க இடதுகை பேட்ஸ்மேன் குவின்டன் டி காக் ரூ.6.75 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியும், இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி ரூ. 6.25 கோடிக்கு குஜராத் அணியும் ஏலம் எடுத்துள்ளன. இவ்விரு அணிகளும் புதிய அணிகளாகும்.

12:43 February 12

ஆர்சிபியில் டூ பிளேசிஸ்

தென்னாப்பிரிக்கா வீரர் ஃபாப் டூ பிளேசிஸை பெங்களூரு அணி ரூ. 7 கோடிக்கு எடுத்துள்ளது

12:36 February 12

ஷ்ரேயஸ் ஐயருக்கு ரூ. 12.25 கோடி

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஷ்ரேயஸ் ஐயரை ரூ. 12.25 கோடிக்கு கொல்கத்தா அணி வாங்கியுள்ளது. குஜராத், கொல்கத்தா அணிகள் போட்டாப்போட்டி போட்ட நிலையில், இறுதியாக அவரை கேகேஆர் கைப்பற்றியது. மேலும், கொல்கத்தா அணியில் கேப்டன் தேவையாக உள்ளது. அதனால், ஷ்ரேயஸ் ஐயரை அந்த அணி பெரும் விலை கொடுத்து ஏலம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

12:31 February 12

ஆர்ஆரில் போல்ட்

நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டிரன்ட் போல்ட்டை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.8 கோடிக்கு வாங்கியுள்ளது.

12:26 February 12

ரபாடாவை கொத்திய பஞ்சாப்

தென்னாப்பிரிக்கா வேகப்பந்துவீச்சாளர் ககிசோ ராபாடாவை பஞ்சாப் கிங்ஸ் அணி 9.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. இதன்மூலம், பஞ்சாப் தற்போது ரூ. 17.50 கோடியை செலவழித்து, ரூ. 64.50 கோடியை கையிருப்பில் வைத்துள்ளது.

12:20 February 12

கொல்கத்தாவில் மீண்டும் கம்மின்ஸ்

ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸை ரூ.7.25 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மீண்டும் எடுத்துள்ளது.

12:16 February 12

ராஜஸ்தானில் அஸ்வின்

இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 கோடி ரூபாய்க்கு எடுத்துள்ளது.

12:09 February 12

முதல் வீரராக தவான்

இந்திய இடதுகை பேட்ஸ்மேன் ஷிகர் தவான் 8.25 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. டெல்லி அணியும் பஞ்சாப் அணியும் தவானுக்கு போட்டிபோட்ட நிலையில், பஞ்சாப் அவரை உறுதிசெய்தது குறிப்பிடத்தக்கது.

09:07 February 12

பெங்களூரு: இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்கான மெகா ஏலம் இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. பெங்களூரு ஐடிசி கார்டேனியா நட்சத்திர விடுதியில் முதல் நாளான இன்று (பிப். 12) பிற்பகல் 12 மணியளவில் ஏலம் தொடங்கியது. ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தொடக்க உரை ஆற்றி வருகிறார்.

இதையும் படிங்க: ஐபிஎல் மெகா ஏலம் 2022: எத்தனை வீரர்கள்... எத்தனை கோடிகள்... A to Z தகவல்கள்...

Last Updated :Feb 12, 2022, 7:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.