ETV Bharat / sports

GT vs MI: குஜராத் அணிக்கு 178 ரன்கள் இலக்கு

author img

By

Published : May 6, 2022, 9:33 PM IST

ipl-2022-mi-score-177-against-gt
ipl-2022-mi-score-177-against-gt

ஐபிஎல் தொடரின் 51ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் அணிக்கு எதிராக பேட்டிங் செய்த மும்பை அணி 177 ரன்களை குவித்துள்ளது.

மும்பை: ஐபிஎல் போட்டியின் 51ஆவது லீக் ஆட்டம் பிராபோர்ன் மைதானத்தில் நடந்துவருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. முதலில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி மும்பை அணி வீரர்கள் களமிறங்கி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்களை எடுத்தனர். அதிகபட்சமாக இஷான் கிஷன் 29 பந்துகளுக்கு 45 ரன்களை குவித்தார். அவருடன் களமிறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா 28 பந்துகளுக்கு 43 ரன்களை குவித்தார். அதோபோல டிம் டேவிட் 21 பந்துகளுக்கு 44 ரன்களை குவித்து அணிக்கு வலுசேர்த்தார்.

மறுப்புறம் பந்துவீச்சில் குஜராத் வீரர் ரஷித் கான் இரண்டு விக்கெட்டுகளையும், அல்சாரி ஜோசப், அல்சாரி ஜோசப், பிரதீப் சங்வான் மூவரும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி அசத்தினர். அந்த வகையில், 178 ரன்கள் வெற்றி இலக்குடன் குஜராத் அணி வீரர்கள் களமிறங்க உள்ளனர்.

இதையும் படிங்க: SRH vs DC: வார்னர் எடுத்த ரிவஞ் - ஹைதராபாத்தை ஹைஜாக் செய்தது டெல்லி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.