ETV Bharat / sports

IPL 2021: நடராஜனுக்கு கரோனா; நடக்குமா இன்றையப் போட்டி?

author img

By

Published : Sep 22, 2021, 3:58 PM IST

Updated : Sep 22, 2021, 5:36 PM IST

நடராஜனுக்கு கரோனா
நடராஜனுக்கு கரோனா

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் நடராஜனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

துபாய்: ஐபிஎல் 2021 சீசனின் இரண்டாம் கட்டப்போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. பஞ்சாப் - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று (செப். 21) நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில், ராஜஸ்தான் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது.

இந்நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு இன்று (செப். 22) கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த பிற ஆறு வீரர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த தகவலை, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

தொடரும் சோகம்

இந்தியாவில் நடைபெற்ற 2021 ஐபிஎல் சீசனின் முதல்கட்டப் போட்டிகளில், நடராஜன் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பின்னர், அறுவை சிகிச்சை மேற்கொண்ட நடராஜன், உடனடியாக காயத்தில் இருந்து மீண்டு பயிற்சியில் ஈடுபட்டுவந்தார்.

நடராஜனுக்கு கரோனா

எனினும், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும், இலங்கை சுற்றுப்பயணத்திலும் அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. டி20 உலக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலாவது அவர் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிலும் அவர் தேர்வாகவில்லை.

ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி இந்தியாவில் தொடங்கியது. பயோ - பபுளில் இருந்த சில வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது.

தற்போது, குறைந்த அளவிலான பார்வையாளர்களோடு போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுவருகின்றன. இன்று (செப். 22) துபாய் சர்வதேச மைதனாத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. நடராஜனுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டாலும், இன்றையப் போட்டி திட்டமிட்டபடி நடக்கும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: IPL 2021: கடைசி ஓவரில் ராஜஸ்தானிடம் வெற்றியை பறிகொடுத்த பஞ்சாப்

Last Updated :Sep 22, 2021, 5:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.