ETV Bharat / sports

ஐபிஎல் 2020: டாஸ் வென்ற கேகேஆர் அணி பந்துவீச்சு!

author img

By

Published : Sep 23, 2020, 7:02 PM IST

Updated : Sep 25, 2020, 5:59 PM IST

KKR Vs MI toss update
KKR Vs MI toss update

மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன், தொடக்கம் முதலே பரபரப்புடன் ரசிகர்களுக்கு விருந்துபடைத்து வருகிறது.

இந்நிலையில் இத்தொடரில் இன்று(செப்.23) நடைபெறவுள்ள ஐந்தாவது லீக் ஆட்டத்தில், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

அபுதாபியிலுள்ள ஷேக் சயீத் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், டாஸ் வென்ற கேகேஆர் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா (கே), குயின்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், சவுரவ் திவாரி, கீரன் பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, குர்னால் பாண்டியா, ஜேம்ஸ் பாட்டின்சன் , ராகுல் சாஹர், ட்ரெண்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா.

கேகேஆர்: தினேஷ் கார்த்திக் (கே), சுனில் நரைன், சுப்மன் கில், நிதீஷ் ராணா, இயன் மோர்கன், ஆண்ட்ரே ரஸ்ஸல், பாட் கம்மின்ஸ்,நிகில் நாயக் குல்தீப் யாதவ், சந்தீப் வாரியர், ஷிவம் மாவி.

இதையும் படிங்க: ஐபிஎல் 2020: தொடரிலிருந்து விலகினார் மிட்செல் மார்ஷ்!

Last Updated :Sep 25, 2020, 5:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.