ETV Bharat / sports

தென் ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. 3 ஃபார்மேட்டிலும் இடம் பிடித்த முகேஷ் குமார்!

author img

By ANI

Published : Nov 30, 2023, 10:49 PM IST

தென் ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
தென் ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

India vs South Africa T20: இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில், அதற்கான அணியை இன்று (நவ.30) அறிவித்துள்ளது.

டெல்லி: இந்தியா - ஆஸ்திரேலிய அணிக்கான டி20 தொடர் கடந்த 23ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடர் வரும் டிசம்பர் 3ஆம் தேதி முடிவடைகிறது. இதனைத்தொடர்ந்து இந்திய அணி, தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20, மூன்று ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் விளையாட உள்ளது. இதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி வரும் டிசம்பர் 10ஆம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில், இத்தொடருக்கான வீரர்களுக்கான பட்டியலை இந்திய அணியின் நிர்வாகம் இன்று (நவ.30) அறிவித்துள்ளது. இதில் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் டெஸ்ட் போட்டிகளில் இடம் பிடித்துள்ளனர். டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ்வும் மற்றும் ஒருநாள் தொடருக்கு கே.எல்.ராகுலும் அணியை வழிநடத்துவர். மேலும், நீண்ட நாளாக இந்திய அணியில் இடம் பெறாத சஞ்சு சாம்சன் இம்முறை ஒருநாள் தொடருக்கு எதிரான அணியில் இடம் பிடித்துள்ளார்.

டி20 தொடருக்கான இந்திய அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் (விகீ), ஜிதேஷ் சர்மா (விகீ), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ் , அர்ஷ்தீப் சிங், முகமது. சிராஜ், முகேஷ் குமார், தீபக் சாஹர்.

ஒருநாள் தொடர்: ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், திலக் வர்மா, ரஜத் படிதார், ரின்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (கேப்டன் & விகீ), சஞ்சு சாம்சன் (விகீ), அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், முகேஷ் குமார், அவேஷ் கான் , அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர்.

டெஸ்ட் தொடர்: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் (விகீ), கே.எல். ராகுல் (விகீ), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது. சிராஜ், முகேஷ் குமார், முகமது. ஷமி (உடற்தகுதிக்கு உட்பட்டவர்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), பிரசித் கிருஷ்ணா.

இதையும் படிங்க: டி20 உலகக் கோப்பை தொடர்: வரலாற்றில் முதல் முறையாகத் தகுதி பெற்ற உகாண்டா அணி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.