ETV Bharat / sports

"அழுத்தமான சூழ்நிலைகளில் பதற்றமின்றி இருப்பதை தோனியிடம் இருந்து கற்றுக் கொண்டேன்" - மனம் திறந்த ரிங்கு சிங்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 24, 2023, 9:34 PM IST

Rinku Singh
Rinku Singh

அழுத்தமான சூழ்நிலைகளில் பதற்றமின்றி அமைதியாக இருப்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியிடம் இருந்து கற்றுக்கொண்டதாக ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.

விசாகப்பட்டினம்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நேற்று (நவம்பர் 23) நடைபெற்றது. இந்த போட்டியானது விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ACA-VDCA கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்தது.

இந்த போட்டியில் இந்திய அணி கடைசி ஓவரில் ஒரு பந்து மீதம் வைத்து த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 208 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜோஸ் இங்கிலிஸ் 110 ரன்கள் குவித்தார். அதன்பின் இந்திய அணியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 42 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் உட்பட 80 ரன்களும், இஷான் கிஷன் 58 ரன்களும் குவித்தனர்.

குறிப்பாக ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் ரிங்கு சிங் அதிரடியாக சிக்சர் அடித்து இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்தார். இவர் 14 பந்துகளில் 22 ரன்கள் குவித்தார். ரிங்கு சிங்கின் பங்களிப்பு இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியமானதாக அமைந்தது. இந்நிலையில், அழுத்தமான சூழ்நிலையில் பதற்றமின்றி அமைதியாக இருப்பத்தை இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனியிடம் இருந்து கற்றுக்கொண்டதாக ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது; "அழுத்தமான சூழலில் பதற்றமின்றி அமைதியாக இருப்பது குறித்து மகேந்திர சிங் தோனியுடன் ஆலோசித்துள்ளேன். குறிப்பாக ஆட்டத்தின் இறுதி ஓவரில் பதற்றமின்றி இருப்பது பற்றி பேசியுள்ளேன். எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு அமைதியாக இருக்க வேண்டும். நேராக பந்து வீச்சாளரை மட்டுமே பார்க்க முயற்சிக்க வேண்டும் என கூறினார். அதன் படியே விளையாட்டின் போது பதற்றமின்றி அமைதியாக இருக்க முயற்சித்தேன்" என்றார்.

இதையும் படிங்க: உலகக் கோப்பையின் மீது கால் வைத்து போஸ் கொடுத்த விவகாரம்.. மிட்செல் மார்ஷ் மீது வழக்குப்பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.