ETV Bharat / sports

IND vs WI: வெற்றிப்பாதையில் தொடருமா ரோஹித் & கோ - இன்று முதல் டி20

author img

By

Published : Jul 29, 2022, 5:59 PM IST

IND vs WI
IND vs WI

இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு இடையிலான முதல் டி20 போட்டி, டிரினிடாட் மற்றும் டொபாகோ தீவின் சான் ஃபெர்னான்டோ நகரில் உள்ள பிரைன் லாரா கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று (ஜூலை 29) இரவு 8 மணியளவில் நடைபெறுகிறது.

டிரினிடாட் மற்றும் டொபாகோ: இந்திய அணி மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட மேற்கு இந்தியத்தீவுகள் அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஒருநாள் தொடரை ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வைட்-வாஷ் செய்தது.

இந்நிலையில், டி20 தொடரின் முதல் போட்டி டிரினிடாட் மற்றும் டொபாகோ தீவின் சான் ஃபெர்னான்டோ நகரில் உள்ள பிரைன் லாரா கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று (ஜூலை 29) இரவு 8 மணியளவில் நடைபெறுகிறது.

இந்திய அணியில், ஒருநாள் தொடரின்போது ஓய்வில் இருந்த ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், புவனேஷ்வர் குமார் ஆகியோர் இந்திய டி20 அணியுடன் இணைந்துள்ளனர். இந்திய அணியின் ஓப்பனிங்கில் ரோஹித் சர்மாவுடன் இஷான் கிஷன் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. இல்லையெனில், இங்கிலாந்து தொடரை போன்று ரிஷப் பந்த் ஓப்பனராக களமிறக்கப்படலாம்.

மிடில் ஆர்டர் தலைவலி: விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால், மூன்றாவது வீரராக ஸ்ரேயாஸ் ஐயரும், அடுத்து சூர்யகுமார், ஹர்திக் களமிறங்குவார்கள் எனத்தெரிகிறது. தொடர்ந்து மிடில் ஆர்டரில் மற்றொரு வீரரை தேர்வு செய்வதுதான் ரோஹித் - ராகுலுக்கு தலைவலியாக இருக்கும்.

மே.இ. தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மிரட்டிய தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் ஆகியோரில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பது புரியாத புதிர்தான். மேலும், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் ஆகியோரின் வருகையால் கீப்பரான சஞ்சுவுக்கு பதில் தீபக் ஹூடாவுக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

வேகப்பந்துவீச்சில் புவி, ஹர்ஷல் படேல் ஆகியோருக்கு இடம் உறுதி. அர்ஷ்தீப்பிற்கு வாய்ப்பளித்தால் வேகப்பந்துவீச்சு பலம்பெறும். ஆல்-ரவுண்டரில் அக்சர் படேலும், சுழற்பந்துவீச்சாளர்களில் அஸ்வினும் பிளேயிங் லெவனில் இடம்பெறலாம்.

பழிதீர்க்கும் மே.இ.தீவுகள்?: டி20 ஸ்பெஷலிஸ்டான மேற்கு இந்திய தீவுகள் அணியில் பூரன், கிங், பாவெல், ஹெட்மயர் என அதிரடி ஹிட்டர்களும், ஒடியன் ஸ்மித், ரோமரியோ ஷெப்பேர்டு, டொமினிக் டிரேக்ஸ் வேகக்கூட்டணியும் இன்றைய போட்டியில் இந்திய அணியை மிரட்ட காத்திருக்கிறது.

மேலும், சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை முழுவதுமாக இழந்ததற்கு பழிக்குப்பழி வாங்க, இன்றைய போட்டியை மே.இ. தீவுகள் அணி காத்திருக்கிறது என்றே கூறலாம்.

இந்திய ஸ்குவார்ட்: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஆவேஷ் கான், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ரவி பீஷ்னோய்.

மே.இ. தீவுகள் ஸ்குவார்ட்: நிக்கோலஸ் பூரன் (கேப்டன்), பிரன்டன் கிங், கைல் மையர்ஸ், ரோவ்மேன் பாவெல், ஷார்மார்க் ப்ரூக்ஸ், ஷிம்ரான் ஹெட்மயர், ஜேசன் ஹோல்டர், கீமோ பால், தேவான் தாமஸ், அகேல் ஹூசைன், டொமினிக் டிரேக்ஸ், ஹெய்டன் வால்ஷ் ஜூனியர், ஓபெட் மெக்காய், ஒடியன் ஸ்மித், ரோமரியோ ஷெப்பேர்டு.

இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட்: செஸ் போர்டு முதல் போட்டி முடிவுகள் வரை... எல்லாமும் இதோ...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.