ETV Bharat / sports

ஒரே வருடத்தில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் பட்டியலில் ரோகித் ஷா்மா முதலிடம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 12, 2023, 10:53 PM IST

Skipper Rohit Sharma plays a brilliant knock to smash most ODI sixes in calendar year
ஒரே வருடத்தில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் பட்டியலில் முதலிடம் பிடித்தார் - ரோகித் ஷா்மா!

Rohit Sharma: பெங்களூருவில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் ஷா்மா 54 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 61 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், ஒரே வருடத்தில் அதிகமான சிக்ஸர்கள் அடித்தவர் பட்டியலில் இவர் முதலிடம் பிடித்துள்ளார்.

பெங்களூரு (கர்நாடகா): 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்ற வருகிறது. இந்த உலகக் கோப்பை ஆரம்பம் முதலே ரோகித் ஷர்மா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று (நவ.12) நடைபெற்று வரும் நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது முதலில் களம் இறங்கிய ரோகித் ஷர்மா இந்த ஆட்டத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 54 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 61 ரன்கள் எடுத்தார்.

2015ஆம் ஆண்டில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 58 சிக்ஸர்கள் அடித்து ஒரே வருடத்தில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் தென் ஆப்பிரிக்கா வீரர் ஏ.பி.டி வில்லியர் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். அதன்பின், இந்த சாதனை யாராலும் முறியடிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், 2023ஆம் ஆண்டில் தற்போது வரை 59 சிக்ஸர்கள் அடித்து ஒரே வருடத்தில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 2019ஆம் ஆண்டில் 56 சிக்ஸர்கள் அடித்து மூன்றாம் இடத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் உள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் 22 சிக்ஸர்கள் அடித்து அதிக சிக்ஸர்கள் அடித்த கேப்டனாக இயோன் மோர்கன் இருந்தார். தற்போது நடைபெற்றும் வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 23 சிக்ஸர்கள் அடித்து அதிக சிக்ஸர்கள் அடித்த கேப்டன் என்று முதலிடத்தையும் ரோகித் ஷர்மா பிடித்துள்ளார்.

ஒரு நாள் உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள் அடித்த கேப்டன்கள் பட்டியல்:

  • 23* - 2023ல் ரோஹித் ஷர்மா*
  • 22 - 2019ல் இயான் மோர்கன்
  • 21 - 2015ல் ஏபி டி வில்லியர்ஸ்
  • 18 - 2019ல் ஆரோன் பிஞ்ச்
  • 17 - 2015ல் பி மெக்கல்லம்

ஒரு நாள் உலகக் கோப்பைகளில் அதிக 50+ ரன்கள் எடுத்த பட்டியல்:

  • 21 - சச்சின் டெண்டுல்கர் (44 இன்னிங்ஸ்)
  • 14 - விராட் கோலி (35 இன்னிங்ஸ்)
  • 13 - ரோஹித் சர்மா (26 இன்னிங்ஸ்)*
  • 13 - ஷகிப் அல் ஹசன் (36 இன்னிங்ஸ்)
  • 12 - குமார் சங்கக்கார (35 இன்னிங்ஸ்)

ஒரு நாள் உலகக் கோப்பையில் இந்திய அணி கேப்டன்களில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியல்:

  • 503 - ரோஹித் சர்மா (2023)*
  • 465 - சவுரவ் கங்குலி (2003)
  • 443 - விராட் கோலி (2019)
  • 332 - எம் அசாருதீன் (1992)
  • 303 - கபில் தேவ் (1983)

மேலும், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டனாக முன்னாள் பிசிசிஐ தலைவரும், முன்னாள் இந்திய அணியின் கேப்டனுமான சவுரவ் கங்குலி இருந்தார். இவர் 2003ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 465 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது, இந்திய அணியின் கேப்டனாக உள்ள ரோகித் ஷர்மா 503 ரன்கள் எடுத்து உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டன் என்று முதலிடம் பிடித்துள்ளார். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: IND Vs NED: அதிரடியாக சதம் அடித்த ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர்... இந்திய அணி 410 ரன்கள் குவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.