ETV Bharat / sports

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரருக்கு ஐசிசி தடை! என்ன காரணம் தெரியுமா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2023, 10:17 PM IST

Marlon Samuels ban for six years
Marlon Samuels ban for six years

Former West Indies player ban for six years: வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான மார்லன் சாமுவேல்ஸுக்கு அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் 6 ஆண்டுகளுக்கு ஐசிசி தடை விதித்துள்ளது.

ஜமைக்கா: வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான மார்லன் சாமுவேல்ஸ் கடந்த 2018 ஆண்டு ஓய்வு பெற்றார். அதன்பின் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தார். இந்நிலையில் அவர் ஏமிரையிட்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு சட்டத்தை மீறிய குற்றத்திற்காக அனைத்து வகையான கிரிக்கெட்டில் விளையாட 6 ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளார். இந்த தடை கடந்த 11ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக ஐசிசி அறிவித்துள்ளது.

2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐசிசியால் நான்கு குற்ற பிரிவுகளுக்கு ஆளானவர், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குற்றங்களில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் வீரர் மார்லர் சாமுவேல்ஸ் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள்;

விதிமுறை 2.4.2 - அவருக்கு வழங்கப்படும் எந்தவொறு பரிசு, பரிசு அல்லது பிற நன்மைகளின் ரசீது, நியமிக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு அதிகாரிகளிடம் வெளிப்படுத்த தவறியுள்ளார். அதாவது வழங்கப்படும் ஆட்ட நாயகன் விருது, தொடர் நாயகன் விருது, மேலும், அத்துடன் கொடுக்கப்படும் காசோலைகளை அணி நிர்வாகத்திடம் ஒப்படைக்க தவறியது.

விதிமுறை 2.4.3 - அமெரிக்க டாலர் 750 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள விருந்தோம்பலின் ரசீதை, ஊழல் எதிர்ப்பு அதிகாரிகளிடம் வெளிப்படுத்த தவறியது.

  • The former West Indies player with more than 300 international appearances has had his ban confirmed by the ICC.

    Details 👇https://t.co/FCybKZNWxz

    — ICC (@ICC) November 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

விதிமுறை 2.4.6 - ஊழல் எதிர்ப்பு அதிகாரிகளின் விசாரனைக்கு ஒத்துழைக்க தவறியது.

விதிமுறை 2.4.7 - விசாரனைக்கு தொடர்ப்புடையதாக இருக்ககூடிய தகவல்களை மறைப்பதன் மூலம் நியமிக்கப்பட்ட ஊழல் அதிகாரிகளின் விசாரனையை தடுப்பது அல்லது தாமதப்படுத்துவது.

இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒருமைப்பாடு மேலாளர் அலெக்ஸ் மார்ஷல் கூறியதாவது; "மார்லன் சாமுவேல்ஸ் இரண்டு தசாப்தங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடினார். அப்போது அவர் பல ஊழல் அமர்வுகளில் பங்கேற்றார் மற்றும் ஊழல் தடுப்பு சட்டங்களின் கீழ் அவரது கடமை என்ன என்பதை நன்கு அறிந்திருந்தார். இப்போது அவர் ஒய்வு பெற்றிருந்தாலும், குற்றங்கள் நடைபெற்ற போது அவர் உடன் இருந்துள்ளார். விதிகளை மீற விரும்பும் எந்த ஒரு பங்கேற்பாளருக்கும் ஆறு ஆண்டுகள் தடை என்பது இருக்கும்" என்றார்.

மார்லன் சாமுவேல் கிட்டதட்ட 18 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி உள்ளார். 71 டெஸ்ட், 204 ஒருநாள் மற்றும் 67 டி20 போட்டிகளில் விளையாடிய இவர் 11064 ரன்கள் அடித்துள்ளார். அதில் 17 சதங்களும், 64 அரைசதங்களும் அடங்கும். மேலும் இவர் 2012 மற்றும் 2016 டி20 உலகக் கோப்பையின் இறுதி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக ஸ்கோர் அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திருநங்கைகள் கிரிக்கெட் விளையாட தடை! பவுலர்களுக்கு நெருக்கடி..ஐசிசியின் புதிய விதி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.