ETV Bharat / sports

இந்திய அணியில் மீண்டும் தினேஷ் கார்த்திக் - ரசிகர்கள் மகிழ்ச்சி!

author img

By

Published : May 22, 2022, 6:25 PM IST

இந்திய அணி அறிவிப்பு
இந்திய அணி அறிவிப்பு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி - 20 தொடரில் விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் இடம் பிடித்துள்ளார்.

டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி, இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டி 20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த நிலையில் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் மூத்த வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

அணியின் கேப்டனாக கே.எல்.ராகுலும் , துணை கேப்டனாக ரிஷப் பந்தும் நியமிக்கப்பட்டுள்ளனர். அணியில் ரிதுராஜ் கேக்வாத், ரிஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்‌ஷர் பட்டேல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர், ஹர்ஷல் பட்டேல், ஆவேஷ் கான் மற்றும் ஐபிஎல் தொடரில் கலக்கிய அர்ஷ்தீப் சிங், 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த உம்ரான் மாலிக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

  • T20I Squad - KL Rahul (Capt), Ruturaj Gaikwad, Ishan Kishan, Deepak Hooda, Shreyas Iyer, Rishabh Pant(VC) (wk),Dinesh Karthik (wk), Hardik Pandya, Venkatesh Iyer, Y Chahal, Kuldeep Yadav, Axar Patel, R Bishnoi, Bhuvneshwar, Harshal Patel, Avesh Khan, Arshdeep Singh, Umran Malik

    — BCCI (@BCCI) May 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் , 2019ஆம் ஆண்டு உலக கோப்பைத் தொடருக்குப் பிறகு, மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்திருக்கிறார். சஞ்சு சாம்ஸனுக்கு அணியில் இடம் கிடைக்காதது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: தாமஸ் கோப்பையினை வென்ற இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.