ETV Bharat / sports

'வீரர்கள் நாட்டுக்காக விளையாட முன்வர வேண்டும்' - பிசிபி தலைவர்!

author img

By

Published : Feb 25, 2020, 9:28 PM IST

Players should think about country, not just about themselves: BCB president
Players should think about country, not just about themselves: BCB president

வங்கதேச விளையாட்டு வீரர்கள் தங்களுக்காக விளையாடும் எண்ணத்தை விட்டு விட்டு, நாட்டிற்காக விளையாட வேண்டுமேன வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நஸ்முல் ஹசன்(Nazmul Hassan) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி, ஓரே டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடியது. இந்தப்போட்டியில் வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர் முஷ்பிகூர் ரஹிம் தனது அதிரடியான ஆட்டத்தினால், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்றாவது இரட்டை சதத்தையடித்து அசத்தினார்.

வங்கதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இதன் மூலம் வங்கதேச அணி 15 மாதங்களுக்கு பின்பு தனது முதல் டெஸ்ட் வெற்றியை பெற்றது. இந்தப் போட்டியில் இரட்டை சதம் அடித்த முஷ்பிகூர் ரஹிம் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் நஸ்முல் ஹசன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "வங்கதேச அணியின் வீரர்கள் ஓவ்வொருவரும் தங்களுக்காக விளையாடாமல், தங்கள் தாய் நாட்டிற்காக விளையாடவேண்டும்.

இரட்டை சதமடித்த மகிழ்ச்சியில் முஷ்பிகூர் ரஹிம்
இரட்டை சதமடித்த மகிழ்ச்சியில் முஷ்பிகூர் ரஹிம்

ஏனெனில் ஒப்பந்த வீரர்கள் அனைவரும் தங்களது நாட்டிற்காக விளையாடியாகவே வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒப்பந்த வீரர்கள் அனைவரும் தேசிய அணிக்கு தேர்வு செய்யப்படும் போது, அவர்களிடம் சொல்லும்படியாக விளையாட வேண்டியது, அவர்களின் கடைமை. இதனை அவர்களாகவே புரிந்துகொண்டு செயல்படவேண்டும் என்றார்.

கடந்த மாதம் வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, அந்த அணியின் முஷ்பிகூர் ரஹிம், எனது குடும்பத்தினர் என்னுடைய பாதுகாப்பு குறித்து கவலைப்படுவதினால் பாகிஸ்தான் அணியுடனான தொடரிலிருந்து விலகிக்கொள்கிறேன் எனத் தெரிவித்திருந்தார்.

வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நஸ்முல் ஹசன்
வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நஸ்முல் ஹசன்

இதன் காரணமாகவே தற்போது பிசிபி தலைவர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணியிடம் படுதோல்வியைச் சந்தித்து.

இதற்கு ஒரு சில வங்கதேச வீரர்கள் பாதுகாப்பு காரணங்களால், பாகிஸ்தான் தொடரை புறக்கணிப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிங்க: 15 மாதங்களுக்கு பின் டெஸ்ட் போட்டியில் முதல் வெற்றியைப் பதிவுசெய்த வங்கதேசம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.