ETV Bharat / sports

Australia vs India: உமேஷ் யாதவ் விலகல் ; ஷர்துல் தாக்கூருக்கு வாய்ப்பு?

author img

By

Published : Dec 31, 2020, 2:27 PM IST

Australia vs India: Shardul likely to play in 3rd Test, Umesh out of series
Australia vs India: Shardul likely to play in 3rd Test, Umesh out of series

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது காயமடைந்த இந்திய வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ், மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் விலகியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மெல்போர்னில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

இப்போட்டியின்போது இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் காயம் காரணமாக ஆட்டத்தின் பாதியிலேயே வெளியேறினார். பின்னர் அவரது காயம் தீவிரமடைந்ததை அடுத்து, ஆஸ்திரேலியா தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு மாற்று வீரராக அறிமுக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது அந்த வாய்ப்பானது அனுபவ வீரர் ஷர்துல் தாக்கூருக்கு வழங்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ அலுவலர் ஒருவர் கூறுகையில், “ஆஸ்திரேலியத் தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நடராஜனை டெஸ்ட் அணியில் சேர்ப்பதற்கு முன்னால், அவர் தமிழ்நாட்டிற்காக முதல்தர போட்டிகளில் மட்டுமே பங்கேற்றுள்ளார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

அதேசமயம் தற்போது மீதமுள்ள பந்துவீச்சாளர்களில் அனுபவ வீரரான ஷர்துல் தாக்கூர் ஏற்கெனவே இந்திய டெஸ்ட் அணியில் விளையாடியுள்ளார். அதனால் உமேஷ் யாதவிற்கு சரியான மாற்று வீரராக ஷர்துல் தாக்கூர் இருப்பார். மேலும் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் அவரே இந்திய அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

மேலும் பந்துவீச்சாளரைத் தேர்வு செய்யும் பொறுப்பு பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் ரஹானே, பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் ஆகியோரிடமே உள்ளது. அதனால் அவர்களில் முடிவு யார் என்பது கூடிய விரைவில் தெரியவரும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: டெஸ்ட் தரவரிசை : ஸ்மித், கோலியை பின்னுக்குத் தள்ளிய வில்லியம்சன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.