ETV Bharat / sports

AUS A vs IND A: கிரீன் சதத்தால் ஃபாலோ ஆனை தவிர்த்த ஆஸ்திரேலியா ஏ

author img

By

Published : Dec 7, 2020, 3:13 PM IST

AUS A vs IND A: Umesh shines but Green frustrates visitors with ton
AUS A vs IND A: Umesh shines but Green frustrates visitors with ton

இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையேயான மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 286 ரன்களை எடுத்துள்ளது.

இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையேயான மூன்று நாள் பயிற்சி ஆட்டம் நேற்று சிட்னியில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்தது.

அதன்படி இந்திய அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 237 ரன்களுடன் முதல்நாள் ஆட்டத்தை நிறைவுசெய்தது. இந்திய அணி தரப்பில் கேப்டன் ரஹானே 108 ரன்களுடனும், முகமது சிராஜ் ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணி 247 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்தது. இந்திய அணி சார்பில் கேப்டன் ரஹானே 117 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலியா ஏ அணியின் தொடக்க வீரர்கள் உமேஷ் யாதவின் பந்துவீச்சில் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதையடுத்து களமிறங்கிய கேப்டன் டிராவிஸ் ஹெட் 18 ரன்களிலும், மார்கஸ் ஹேரிஸ் 35 ரன்களிலும் ஆடமிழந்து பெவிலியன் திரும்பினர்.

உமேஷ் யாதவ்
உமேஷ் யாதவ்

அதன் பின்னர் களமிறங்கிய கேமரூன் கிரீன் - டிம் பெய்ன் இணை நிலைத்து ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பாக விளையாடிய கேமரூன் கிரீன் சதமடித்தும் அசத்தினார். இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா ஏ அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 286 ரன்களை எடுத்தது.

சதமடித்த மகிழ்ச்சியில் கேமரூன் கிரீன்
சதமடித்த மகிழ்ச்சியில் கேமரூன் கிரீன்

அந்த அணியின் அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 114 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

  • End of Day 2: Australia A 286/8 at stumps after the Indians declare at 247/9.

    3️⃣ wickets for Umesh Yadav and 2️⃣ wickets each for Mohammed Siraj and R Ashwin. pic.twitter.com/YfsyA2UTN1

    — BCCI (@BCCI) December 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதன்மூலம் 39 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா ஏ அணி மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:‘ஆட்டத்தின் நாயகன் நடராஜன்தான்’ - ஹர்திக் பாண்டியா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.