ETV Bharat / sitara

நடிகர் டேனியல் பாலாஜிக்கு கரோனா

author img

By

Published : May 13, 2021, 9:56 PM IST

Daniel
Daniel

சென்னை: நடிகர் டேனியல் பாலாஜிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் டேனியல் பாலாஜி. இவர் 'வேட்டையாடு விளையாடு' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து 'பைரவா', 'வடசென்னை', 'பிகில்' உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும் வில்லனாகவும் வலம் வந்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.

இந்நிலையில், டேனியல் பாலாஜிக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.