ETV Bharat / sitara

’வந்தான்..சுட்டான்..ரிப்பீட்டு...’ வைரலாகும் சிம்பு வெர்ஷன்

author img

By

Published : Oct 7, 2021, 3:39 PM IST

சிம்பு
சிம்பு

நடிகர் சிம்பு மாநாடு படத்திற்கு டப்பிங் கொடுத்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள, 'மாநாடு' படத்தில் சிம்பு ஹீரோவாக நடித்துள்ளார். இவருடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே. சூர்யா, பாரதிராஜா, உதயா, பிரேம்ஜி என பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இத்திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையன்று வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

மாநாடு படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக எஸ்.ஜே. சூர்யா, 'வந்தான்..சுட்டான்..ரிப்பீட்டு' என அவர் பாணியில் பேசிய வசனம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் மாநாடு படத்திற்குச் சிம்பு டப்பிங் கொடுக்கும்போது எஸ்.ஜே.சூர்யாவின் டைலாக்கான, ’வந்தான்..சுட்டன்..ரிப்பீட்டு’ என அவர் வெர்ஷனில் பேசினார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி சிம்பு ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகிறது.

இதையும் படிங்க: நடிகை யாமி கௌதமுக்கு தோல் நோய்; ரசிகர்கள் சோகம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.