ETV Bharat / sitara

இந்தியில் வெளியான சூப்பர் ஹிட் படத்தை தமிழில் ரீமேக் செய்யும் ஆர்.ஜே பாலாஜி

author img

By

Published : Mar 1, 2021, 4:50 PM IST

rjbalaji
rjbalaji

இந்தியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 'பதாய் ஹோ' திரைப்படத்தை தமிழில் ஆர்.ஜே பாலாஜி இயக்கி நடிக்கவுள்ளார்.

அமித் ரவீந்திரநாத் ஷர்மா இயக்கத்தில் 2018ஆம் ஆண்டு வெளியான பாலிவுட் திரைப்படம் 'பதாய் ஹோ'. ஆயுஷ்மான் குரானா, நீனா குப்தா, கஜ்ராஜ் ராவ் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

rjbalaji
பதாய் ஹோ பட போஸ்டர்

தற்போது இந்த படத்தின் தமிழ் ரீமேக்கை ஆர்.ஜே பாலாஜி இயக்கி நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு 'வீட்ல விசேஷங்க' என்ற தலைப்பு வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இந்த தலைப்பில் பாக்யராஜ் படம் இயக்கியுள்ளதால் அவரிடம் 'வீட்ல விசேஷங்க' பட தலைப்பு உரிமை குறித்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவுற்றதாக தெரிகிறது. விரைவில் ஆர்.ஜே பாலாஜியுடன் நடிக்கும் நடிகை, இதர கதாபாத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நயன்தாரா - ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் வெளியான 'மூக்குத்தி அம்மன்' திரைப்படத்தை ஆர்.ஜே பாலாஜி சரவணன் என்பவருடன் இணைந்து இயக்கியிருந்தார். 'வீட்ல விசேஷங்க' திரைப்படம் இவர் தனியாக இயக்கும் முதல்படமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ’இவர மட்டும் ஏன் நீங்க டீம்ல சேத்துக்க மாட்டுகிறீங்க’ கொதித்தெழுந்த ஆர்ஜே பாலாஜி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.