ETV Bharat / sitara

28 ஆண்டுக்கு பிறகு கம்பீர நடிகருடன் ஜோடி சேரும் மீனா!

author img

By

Published : Jul 18, 2019, 11:47 PM IST

ராஜ்கிரணு

மம்முட்டி ஹீரோவாக நடிக்கும் மலையாள படத்தின் மூலம் மீனாவும், ராஜ்கிரணும் 28 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்துள்ள செய்தி கோலிவுட் வட்டாரத்தை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இயக்குநர் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் 1991ஆம் ஆண்டு ராஜ்கிரண், மீனா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'என் ராசாவின் மனசிலே'. இப்படத்தின் மிகப்பெறிய வெற்றிதான் தமிழ் சினிமாவில் இருவருக்கும் தனித்த அடையாளத்தை தந்தது. இதையடுத்து 'பாசமுள்ள பாண்டியரே' படத்தில் நடித்தனர். இப்படத்திற்கு பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை. ராஜ்கிரண் ஹீரோவாக நடித்து பின்பு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

மீனாவும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து தற்போது மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், மம்முட்டி நடிக்கும் 'ஷைலாக்' என்ற மலையாள படத்தில் மீனாவும் ராஜ்கிரணும் 28 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்துள்ளனர். முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

மாஸ்டர் பீஸ், மதுரை ராஜா படத்தை இயக்கிய அஜய் வாசுதேவ் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் தொடக்கவிழாவில் இருவரும் கலந்துக் கொண்ட புகைப்படம் வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இருவரும் இணைந்து நடிப்பது மலையாள படமாக இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.