ETV Bharat / sitara

எதிர்ப்புகளுக்குப் பிறகு கவரில் இடம்பெற்ற தெருக்குரல் அறிவு?

author img

By

Published : Aug 24, 2021, 9:08 AM IST

Updated : Aug 24, 2021, 1:45 PM IST

தெருக்குரல் அறிவு
தெருக்குரல் அறிவு

ரோலிங் ஸ்டோன் பத்திரிகையில் தெருக்குரல் அறிவு புகைப்படம் இடம்பெறாததற்குஇயக்குநர் பா. இரஞ்சித் உள்ளிட்டோர் குரல் கொடுத்தனர்.

’எஞ்ஜாயி எஞ்சாமி’, ’நீயே ஒளி’ ஆகிய பாடல்களுக்கு ஏராளமான ரசிகர் உலகம் முழுவதும் உள்ளனர். இந்த இரண்டு பாடல்கள் குறித்து, ரோலிங் ஸ்டோன் பத்திரிகை கவர் ஸ்டோரி ஒன்றை உருவாக்கியது. இதற்காகப் பாடகி தீ, நீயே பாடலில் இடம்பெற்றுள்ள ராப் பாடகர் ஷான் வின்சென்ட் டி பால் ஆகியோரிடம் பேட்டி எடுத்து, கவர் ஸ்டோரியில் அவர்களது புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது.

இந்தப் பாடல்கள் ஹிட் அடிக்க காரணமாக இருந்ததே, தெருக்குரல் அறிவு எழுதிய வரிகளே. ஆனால் அப்படி இருக்கையில் அவரது பெயர் இடம்பெறாமல் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் பலரும் அறிவுக்கு சமூக வலைதளங்களில் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். அந்தவகையில் பா. இரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் இதற்குக் கண்டனம் தெரிவித்துப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "எஞ்சாயி எஞ்சாமி, நீயே ஒலி பாடல் எழுதி பாடிய தெருக்குரல் அறிவு மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளார். ரோலிங் ஸ்டோன் இந்தியா ஏன் இப்படிச் செய்கிறது" எனக் கேள்வி எழுப்பினார். இவரது இந்தப் பதிவுக்கு ஆதரவாகப் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

ரோலிங் ஸ்டோன்
ரோலிங் ஸ்டோன்

மேலும் பலரும் இதற்கு எதிராகக் குரல் எழுப்பிய நிலையில், ரோலிங் ஸ்டோன் பத்திரிகையில் தெருக்குரல் அறிவு புகைப்படம் இடம்பெற்றது போல் ரசிகர்கள் பகிர்ந்துவருகின்றனர்.

இதையும் படிங்க: தேசிய பணமாக்கல் திட்டத்தை அறிமுகம் செய்த நிர்மலா சீதாராமன்

Last Updated :Aug 24, 2021, 1:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.