ETV Bharat / sitara

நட்சத்திரம் நகர்கிறது படப்பிடிப்பு நிறைவு!

author img

By

Published : Dec 20, 2021, 11:36 AM IST

நட்சத்திரம் நகர்கிறது
நட்சத்திரம் நகர்கிறது

‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

‘அட்டக்கத்தி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பா. ரஞ்சித். அதன்பிறகு மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை என ஆக்‌ஷன் படங்களாக இயக்கி வந்தார்.

தற்போது ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்ற பெயரில் ஒரு ரொமான்டிக் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா, கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நீண்ட நாள்களாக நடைபெற்று வந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனையொட்டி கேக் வெட்டி கொண்டாடியுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

இதையும் படிங்க: பேச்சிலர்ப் படக்குழுவினரைப் பாராட்டிய பாரதிராஜா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.