ETV Bharat / sitara

பேச்சிலர்ப் படக்குழுவினரைப் பாராட்டிய பாரதிராஜா!

author img

By

Published : Dec 20, 2021, 10:32 AM IST

ஜீ.வி.பிரகாஷ்குமார் நடித்திருந்த பேச்சிலர் படத்தை பார்த்த இயக்குநர் பாரதிராஜா வெகுவாக பாராட்டியுள்ளனர்.
பேச்சிலர்ப் படக்குழுவினரைப் பாராட்டிய பாரதிராஜா!
பேச்சிலர்ப் படக்குழுவினரைப் பாராட்டிய பாரதிராஜா!

இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ள திரைப்படம் 'பேச்சிலர்'. அவருக்கு ஜோடியாக நடிகை திவ்யபாரதி நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர்,சதீஷ் செல்வகுமார் இயக்கியுள்ளார்.

ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி சார்பில், தயாரிப்பாளர் ஜி.டில்லிபாபு இப்படத்தைத் தயாரித்துள்ளார். கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான இப்படம் வெற்றி பெற்றது.

குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இப்படம் பலத்த வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் இப்படத்தின் வெற்றி விழாவும் கொண்டாடப்பட்டது.

படத்தைப் பார்த்த இயக்குநர் பாரதிராஜா, படத்தையும் இயக்குனரையும் வெகுவாக பாராட்டியுள்ளார். அனைவரும் ஒருமுறையாவது நிச்சயம் பார்க்க வேண்டிய படம் என்று புகழ்ந்துள்ளார். இதனால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க:BigBoss: கமல் முன்பு 'அன்பறிவு' பட ட்ரெய்லரை வெளியிட்ட ஆதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.