ETV Bharat / sitara

'அண்ணாத்த' பின்னணி இசையை நேரடியாக வாசித்துக் காண்பித்த டி.இமான்

author img

By

Published : Feb 27, 2020, 12:41 PM IST

DImman
DImman

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் 'அண்ணாத்த' படத்தின் பின்னணி இசையை ரசிகர்களுக்கு டி. இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் நேரடியாக வாசித்துக் காண்பிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கும் 'அண்ணாத்த' படத்தில் நடித்து வருகிறார். 'தலைவர் 168' என்ற பெயருடன் ஆரம்பிக்கப்பட்ட இப்படம், சமீபத்தில் இதன் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில் அண்ணாத்த என்னும் தலைப்பை மோஷன் போஸ்டராக வெளியிட்டது.

இந்த போஸ்டர் சமூகவலைதளத்தில் வைரலானது. பொதுவாக ரஜினியின் படத்தில் ரஜினியின் இன்ட்ரோ சீனும் தீம் மியூசிக்கும் மிகவும் முக்கியமானதாகும். இந்த படத்தின் மோஷன் போஸ்டரின் பின்னணி இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது மோஷன் போஸ்டரில் பிளே ஆன பின்னணி இசையை ரசிகர்களுக்கு படத்தின் இசையமைப்பாளர் டி. இமான் தனது சமூகவலைதளத்தில் வாசித்து காண்பித்துள்ளார். அந்த வீடியோவில், கீபோர்டை மட்டும் வைத்து வாசித்து காண்பித்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வியப்பும் ஆச்சிரியமும் அடைந்து வைரலாக்கி வருகின்றனர்.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, நயன்தாரா, பிரகாஷ்ராஜ், சூரி என மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகின்றனர். 'அண்ணாத்த' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நிறைவடைந்துள்ளது. இப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிங்க: அடி தூள்... ரஜினிகாந்த் படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.