ETV Bharat / sitara

அருண் விஜய்யின் 'பார்டர்' பட புதிய போஸ்டர் வெளியீடு!

author img

By

Published : May 14, 2021, 8:10 PM IST

arun vijay
arun vijay

சென்னை: நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'பார்டர்' படத்தின் புதிய போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

'குற்றம் 23' படத்தின் வெற்றிக்குப் பிறகு அருண் விஜய் - இயக்குநர் அறிவழகன் மீண்டும் பார்டர் என்னும் புதிய படத்தில் இணைந்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, டெல்லி, ஆக்ரா உள்ளிட்டப் பகுதிகளில் நடைபெற்றது.

இந்தப் படத்தில் ரெஜினா, ஸ்டெஃபி பட்டேல் என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.

சாம் சி.எஸ். இசையமைத்துவரும் இப்படத்திற்கு ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். ஆல்இன்ஆல் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து படத்தின் இறுதி கட்டப் பணிகளை படக்குழுவினர் ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், இன்று (மே 14) ரம்ஜான் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக 'பார்டர்' படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.